PAT 5.3.8

எந்தாய்! என்சித்தம் நின்பாலது

460 எத்தனைகாலமும்எத்தனையூழியும் இன்றொடுநாளையென்றே *
இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன் இனிஉன்னைப்போகலொட்டேன் *
மைத்துனன்மார்களைவாழ்வித்து மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்! *
சித்தம்நின்பாலதறிதியன்றே திருமாலிருஞ்சோலையெந்தாய்!
460 ĕttaṉai kālamum ĕttaṉai ūzhiyum * iṉṟŏṭu nāl̤ai ĕṉṟe *
ittaṉai kālamum poyk kiṟippaṭṭeṉ * iṉi uṉṉaip pokalŏṭṭeṉ **
maittuṉaṉmārkal̤ai vāzhvittu * māṟṟalar nūṟṟuvaraik kĕṭuttāy! *
cittam niṉpālatu aṟiti aṉṟe * tiru māliruñ colai ĕntāy! (8)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

460. I have spent years, ages and eons, thinking that I could see You today or tomorrow. Now I will not leave You. You gave your brothers-in-law the Pāndavās life and destroyed the hundred Kauravās. Don’t you know that my heart is with you, O my father, god of Thirumālirunjolai?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலை; எந்தாய்! பிரானே!; இன்றொடு இன்று நேற்று; நாளை என்றே நாளை என்று கழிந்த காலம்; எத்தனை காலமும் எத்தனை காலமோ; எத்தனை எத்தனை; ஊழியும் பிரளயங்களோ; இத்தனை காலமும் இத்தனை காலமும்; போய் அகப்பட்டு; கிறிப்பட்டேன் அவதிப்பட்டேன்; இனி உன்னை இனிமேல் உன்னை; போகலொட்டேன் போகவிட மாட்டேன்; மைத்துனன்மார்களை பாண்டவர்களை; வாழ்வித்து வாழவைத்து; மாற்றலர் சத்ருக்கள்; நூற்றுவரை நூறுபேரையும்; கெடுத்தாய்! அழியச்செய்தாய்!; சித்தம் எனது நெஞ்சம்; நின்பாலது உன் திறத்தில் ஈடுபட்டுள்ளமையை; அறிதி அன்றே அறிகின்றாயன்றோ?
ĕntāy! o Lord; tirumāliruñcolai of Thirumalirunjolai; iṉṟŏṭu today, yesterday,; nāl̤ai ĕṉṟe and tomorrow; ĕttaṉai kālamum how many ages have passed; ĕttaṉai and how many; ūḻiyum cosmic dissolutions have passed; ittaṉai kālamum all this time,; poy I have been trapped and; kiṟippaṭṭeṉ tormented; iṉi uṉṉai hereafter, I will; pokalŏṭṭeṉ never let you go; vāḻvittu You protected the; maittuṉaṉmārkal̤ai Pandavas; nūṟṟuvarai and made their hundred; māṟṟalar enemies; kĕṭuttāy! perish; cittam my heart is; niṉpālatu completely devoted to your divine feet,; aṟiti aṉṟe do you not know this?