PAT 5.3.7

அஞ்சேலென்று என்க்கு அருள்செய்வாய்

459 அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி * உன்பேரருளால்
இக்கரையேறியிளைத்திருந்தேனை அஞ்சேலென்றுகைகவியாய் *
சக்கரமும்தடக்கைகளும் கண்களும்பீதகவாடையொடும் *
செக்கர்நிறத்துச்சிவப்புடையாய்! திருமாலிருஞ்சோலையெந்தாய்!
459 akkarai ĕṉṉum aṉattak kaṭalul̤ azhunti * uṉ per arul̤āl *
ikkarai eṟi il̤aittirunteṉai * añ cel ĕṉṟu kai kaviyāy! **
cakkaramum taṭakkaikal̤um * kaṇkal̤um pītaka āṭaiyŏṭum *
cĕkkar niṟattuc civappuṭaiyāy! * tiru māliruñ colai ĕntāy! (7)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

459. I was immersed in the sufferings of this world and now by your generous grace have got ashore. I am tired. Please give me your grace and say to me, “Don’t be afraid. ” O god of Thirumālirunjolai with a shining discus (chakra) your hands are strong, your eyes are lovely, you wear silk garments, and your body has the color of the red evening sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சக்கரமும் திருவாழி என்னும் சக்கரம்; தடக்கைகளும் ஏந்திய திருக்கைகளும்; கண்களும் திருக்கண்களும்; பீதக ஆடையொடும் பீதாம்பரத்தோடும்; செக்கர் நிறத்துச் சிவந்த வானம் போன்ற; சிவப்பு சிவப்பு; உடையாய்! வண்ணமுடையவனே!; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலை; எந்தாய்! பிரானே!; அக்கரை என்னும் சம்சாரம் என்கிற; அனத்தக் கடலுள் அநர்த்தமான கடலுள்; அழுந்தி அழுந்தி; உன் பேர் அருளால் உனது பரம கிருபையினால்; இக்கரை ஏறி வைகுண்டம் ஏற நினைத்து; இளைத்து இளைத்து; இருந்தேனை இருந்தவனான என்னை; அஞ்சேல் என்று பயப்படாதே என்று; கை கவியாய் அபயக் கரம் காட்டவேணும்
ĕntāy! o Lord; tirumāliruñcolai of Thirumalirunjolai; uṭaiyāy! with the complexion; civappu of red hue; cĕkkar niṟattuc like a crimson sky,; taṭakkaikal̤um with the divine Hands that bear; cakkaramum the holy discus called Thiruvazhi; kaṇkal̤um with sacred eyes; pītaka āṭaiyŏṭum with the golden silk garment; aḻunti having sunk deep; aṉattak kaṭalul̤ in this disastrous ocean; akkarai ĕṉṉum of samsara; irunteṉai me, who is; ikkarai eṟi longing to ascend to Vaikuntha; uṉ per arul̤āl by your supreme grace,; il̤aittu is exhausted; kai kaviyāy please shown your Hand of assurance; añcel ĕṉṟu denoting "do not fear,"