PAT 5.3.4

உன் பாதநிழலே என் உயிர்ப்பிடம்

456 காதம்பலவும்திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லைநீரும்மில்லை * உன்
பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம் நான்எங்கும்காண்கின்றிலேன் *
தூதுசென்றாய்! குருபாண்டவர்க்காய் அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று *
பேதஞ்செய்துஎங்கும்பிணம்படுத்தாய்! திருமாலிருஞ்சோலையெந்தாய்!
456 kātam palavum tirintu uzhaṉṟeṟku * aṅku or nizhal illai * nīrumillai uṉ
pāta nizhal allāl maṟṟor uyirppiṭam * nāṉ ĕṅkum kāṇkiṉṟileṉ **
tūtu cĕṉṟāy kuru pāṇṭavarkkāy * aṅku or pŏyccuṟṟam pecic cĕṉṟu *
petam cĕytu ĕṅkum piṇampaṭuttāy! * tiru māliruñ colai ĕntāy (4)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

456. O father, lord of Thirumālirunjolai! I have wandered for several miles but have found no shade or water here. Except the shade beneath Your feet, I don't see any refuge that would make me survive. O! God! You went as a messenger for the Pāndavās ; entertained a feigned relationship with the Kauravās, made them your enemies and caused their total destruction

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குரு குருவம்சத்திற் பிறந்த; பாண்டவர்க்காய் பாண்டவர்களுக்காக; தூது சென்றாய்! தூது போய்; அங்கு ஓர் அங்கு ஒரு பொய்; பொய் சுற்றம் உறவைப் பாராட்டி; பேசி பேச்சு நடத்திட; சென்று இரு தரப்பினர்க்கும்; பேதம் செய்து பேதம் ஏற்படுத்தி; எங்கும் எங்கும்; பிணம் படுத்தாய்! பிணமாகும்படி செய்தாய்; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையில்; எந்தாய் உள்ள எம்பெருமானே!; காதம் பலவும் திரிந்து பலகாத தூரம் திரிந்து; உழன்றேற்கு அலைந்த எனக்கு; அங்கு ஓர் அவ்விடங்களில் ஒதுங்குவதற்கு; நிழல் இல்லை ஒரு நிழலும் இல்லை; நீர் இல்லை நீரும் இல்லை; உன் பாத உன் திருவடி; நிழல் அல்லால் நிழலைத்தவிர; மற்றோர் மற்றொரு; உயிர்ப்பிடம் மூச்சுவிடுமிடம்; நான் எங்கும் நான் எங்கும்; காண்கின்றிலேன் காண்கின்றிலேன்
tūtu cĕṉṟāy! You went as a messenger; pāṇṭavarkkāy for the Pandavas; kuru who were born in the Kuru dynasty; aṅku or there, You praised; pŏy cuṟṟam a false alliance; peci and held talks; petam cĕytu causing division; cĕṉṟu between the two sides; piṇam paṭuttāy! resulting in death; ĕṅkum everywhere; ĕntāy o my Lord who resides in; tirumāliruñcolai Thirumaliruncholai!; uḻaṉṟeṟku for me, who has wandered endlessly; kātam palavum tirintu over great distances; niḻal illai there was not even a shadow; aṅku or in those places, to shelter under; nīr illai nor was there any water; niḻal allāl except for the shade of; uṉ pāta Your divine feet; kāṇkiṉṟileṉ I do not find it; nāṉ ĕṅkum anywhere else; maṟṟor a place; uyirppiṭam to breathe