PAT 5.3.2

எந்தையே! இனி உன்னைப் போகலொட்டேன்

454 வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால் *
ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லை *
அளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று *
தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையெந்தாய்!
454 val̤aittu vaitteṉ iṉip pokalŏṭṭeṉ * uṉ taṉ intira-ñālaṅkal̤āl *
ŏl̤ittiṭil niṉ tiruvāṇai kaṇṭāy * nī ŏruvarkkum mĕyyaṉ allai **
al̤ittu ĕṅkum nāṭum nakaramum * tammuṭait tīviṉai tīrkkal uṟṟu *
tĕl̤ittu valañcĕyyum tīrttam uṭait * tiru māliruñ colai ĕntāy (2)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

454. I have trapped You in my heart ; I won't allow You to leave me. If You hide by tricks, I swear by You and Your divine consort that what You do isn't proper. O! God! You reside in Thirumāliruncholai, whose water can cleanse the ills of all and protect all towns and villages.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாடும் நாட்டிலுள்ளாரும்; நகரமும் நகரத்திலுள்ளாரும்; அளித்து எங்கும் காத்து எங்கும்; தம்முடை தங்களுடைய; தீவினை தீயகர்மங்களை; தீர்க்கல் உற்று ஒழிப்பத்தில் விருப்புற்று; தெளித்து தெளிவடைய; வலஞ்செய்யும் பலத்தைக்கொடுக்ககூடிய; தீர்த்தம் உடைத் தீர்த்த விசேஷங்களையுடைய; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையிலிருக்கும்; எந்தாய்! என் அப்பனே!; வளைத்து உன்னைச்; வைத்தேன் சூழ்ந்துகொண்டேன்; இனி இனி உன் பெருமை அறிந்த பின்; போகலொட்டேன் உன்னைப் போகவிடமாட்டேன்; உன் தன் உன்னுடைய; இந்திர ஞாலங்களால் மாயச்செய்கையினால்; ஒளித்திடில் நின் ஒளித்துக் கொண்டால்; திருவாணை கண்டாய் உனது பிராட்டியின் மேல் ஆணை; நீ ஒருவர்க்கும் நீ ஒருவரிடத்திலும்; மெய்யன் அல்லை உண்மை பேசபவன் இல்லை
vaitteṉ I have surrounded; val̤aittu You; ĕntāy! my Lord!; tirumāliruñcolai who dwells in Thirumaliruncholai; tīrttam uṭait with sacred, powerful waters; valañcĕyyum that gives strength; tĕl̤ittu and clarity; tīrkkal uṟṟu as He has the desire to eliminate; tammuṭai the; tīviṉai sins; al̤ittu ĕṅkum and protect; nāṭum those in the countryside; nakaramum and those in the cities; iṉi now that I’ve known your greatness; pokalŏṭṭeṉ I will never let you go; ŏl̤ittiṭil niṉ even if you hide yourself; uṉ taṉ by your; intira ñālaṅkal̤āl divine illusion; tiruvāṇai kaṇṭāy I swear by Your divine Consort; nī ŏruvarkkum to anyone, You; mĕyyaṉ allai dont speak truth