PAT 5.2.8

என் சென்னியில் பாத இலச்சினை வைத்துவிட்டார்

450 ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து * என்னுள்ளே
பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து *
போதில்கமலவன்னெஞ்சம் புகுந்துஎன்சென்னித்திடரில் *
பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே.
450 etaṅkal̤ āyiṉa ĕllām * iṟaṅkal iṭuvittu * ṉṉul̤l̤e
pītaka vāṭaip piraṉār * pirama kuruvāki vantu **
potil kamala vaṉ nĕñcam * pukuntu ĕṉ cĕṉṉit tiṭaril *
pāta ilacciṉai vaittār * paṇṭu aṉṟu paṭṭiṉam kāppe (8)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

450. Adorning in fine silk, he came to me as a divine guru, lifted me from ignorance and enlightened me, entered my heart that is like a blooming lotus and marked me with his foot on my head. My body is not the same as it was. God is in it now and he protects me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பீதக வாடை பீதாம்பரதாரியான; பிரானார் பெருமான்; பிரம பிரம்மோபதேசம் செய்யக்கூடிய; குருவாகி வந்து குருவாக வந்து; போதில் அறிவுக்கு இருப்பிடமான; கமல கமலம் போன்ற; வன் நெஞ்சம் என் என் வன்மையான மனதில்; புகுந்து பிரவேசித்து; என்னுள்ளே என் மனதிலிருந்து; ஏதங்கள் தோஷங்களாக; ஆயின எல்லாம் இருப்பவற்றையெல்லாம்; இறங்கல் இடுவித்து நீங்கப் பண்ணி; சென்னித் திடரில் என் உச்சந்தலையில்; பாத இலச்சினை திருவடி முத்திரை; வைத்தார் வைத்தான்; பண்டு என் ஆத்மாவும் சரீரமும்; அன்று முன்புபோல் அன்று; பட்டினம் காப்பே கடவுளால் காப்பாற்றப்பட்டுள்ளது
pirāṉār the Lord; pītaka vāṭai who wears yellow garments; kuruvāki vantu came as a Guru; pirama to give the sacred teaching; potil he is the seat of knowledge; kamala who is like a lotus; pukuntu He entered; vaṉ nĕñcam ĕṉ my cruel mind; iṟaṅkal iṭuvittu and removed; āyiṉa ĕllām all the existing; etaṅkal̤ impurities; ĕṉṉul̤l̤e from my mind; vaittār He placed; pāta ilacciṉai the seal of His holy feet; cĕṉṉit tiṭaril on my head; paṇṭu my soul and body; aṉṟu are no longer as they once were; paṭṭiṉam kāppe they have been protected by the Lord