PAT 5.2.7

கடல்வண்ணன் என் வல்வினைகளை மாற்றிவிட்டான்

449 கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி *
அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை *
வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி *
பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே.
449 kŏṅkaic ciṟu varai ĕṉṉum * pŏtumpiṉil vīzhntu vazhukki *
aṅku or muzhaiyiṉil pukkiṭṭu * azhuntik kiṭantu uzhalveṉai **
vaṅkak kaṭal vaṇṇaṉ ammāṉ * valviṉai āyiṉa māṟṟi *
paṅkap paṭāvaṇṇam cĕytāṉ * paṇṭu aṉṟu paṭṭiṉam kāppe (7)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

449. I got trapped by physical pleasures, slipped and fell into the small cave of lust and wallowed in it unable to get out. My dear lord, colored like the shining ocean removed my bad karmā and saved me from my troubles. My body is not the same as it was. God is in it now and he protects me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொங்கைச் மார்பகங்களையும்; சிறு வரை என்னும் மெல்லிய இடையும்; பொதும்பினில் இடையில் ஒரு குழியில்; வழுக்கி காமக்குழியில் வழுக்கி; வீழ்ந்து விழுந்து; அங்கோர் அங்கு உள்ள ஒரு; முழையினில் கொடிய நரகத்தில்; புக்கிட்டு அழுந்தி விழுந்து; கிடந்து அழுந்தி கிடந்து; உழல்வேனை உழலும் என்னை; வங்கக் கடல் கடல் போன்ற; வண்ணன் கறுத்த நிறமுடைய; அம்மான் எம்பெருமான்; வல்வினை தீவினைகளாய்; ஆயின இருப்பவைகளை; மாற்றி போக்கி; பங்கப் படாவண்ணம் பங்கமேற்படாதபடி; செய்தான் காப்பாற்றினான்; பண்டு என் ஆத்மாவும் சரீரமும்; அன்று முன்புபோல் அன்று; பட்டினம் காப்பே கடவுளால் காப்பாற்றப்பட்டுள்ளது
kŏṅkaic the breasts,; ciṟu varai ĕṉṉum the slender waist,; pŏtumpiṉil the pit in the waist makes me; vaḻukki slip into the pit of lust; vīḻntu and fall; uḻalveṉai I who struggle; pukkiṭṭu aḻunti fall; aṅkor into a; muḻaiyiṉil cruel hell; kiṭantu sink and stay there; ammāṉ my Lord; vaṇṇaṉ with dark complexion; vaṅkak kaṭal like the sea; cĕytāṉ saved me from; paṅkap paṭāvaṇṇam destruction; māṟṟi by eliminating; āyiṉa the things that are; valviṉai sinful deeds; paṇṭu my soul and body; aṉṟu are no longer as they once were; paṭṭiṉam kāppe they have been protected by the Lord