PAT 5.1.8

உன்னையே புகழுமாறு அருள் செய்

440 வண்ணமால்வரையேகுடையாக
மாரிகாத்தவனே! மதுசூதா! *
கண்ணனே! கரிகோள்விடுத்தானே!
காரணா! களிறட்டபிரானே! *
எண்ணுவாரிடரைக்களைவானே!
ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே! *
நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும்
நன்மையேஅருள்செய்எம்பிரானே!
440 vaṇṇa māl varaiye kuṭaiyāka * māri kāttavaṉe! matucūtā! *
kaṇṇaṉe kari kol̤ viṭuttāṉe! * kāraṇā kal̤iṟu aṭṭa pirāṉe! **
ĕṇṇuvār iṭaraik kal̤aivāṉe! * ettarum pĕruṅ kīrttiyiṉāṉe! *
naṇṇi nāṉ uṉṉai nāl̤tŏṟum ettum * naṉmaiye arul̤cĕy ĕmpirāṉe (8)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

440. You lifted the huge beautiful Govardhanā mountain, used it as an umbrella and protected the cowherds and the cows from the storm. O Madhusudanan, Kannā, You released the elephant Gajendra from his suffering and killed the elephant Kuvalayāpeedam, You are the reason for the Universe You remove the troubles of your worshipers. You are so great that I do not have the words to praise you. O my dear lord, give me your grace so that I may approach you and worship you every day.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காரணா! ஜகத்காரணனே!; எண்ணுவார் உன்னைத் தியானிப்பவர்களுடைய; இடரை துன்பங்களை; களைவானே! போக்குபவனே!; மதுசூதா! மதுசூதனனே!; கண்ணனே! கண்ணனே!; கரி கஜேந்திரனின் [முதலையால் வந்த]; கோள் விடுத்தானே! துயர் நீக்கியவனே!; வண்ண மால் அழகிய பெரிய; வரையே கோவர்த்தன மலையைக்; குடையாக குடையாகத் தூக்கி; மாரி மழையினின்றும்; காத்தவனே காத்தருளினவனே!; களிறு குவலயாபீடமென்னும்; அட்ட! யானையை முடித்தவனே!; பிரானே பெம்மானே!; ஏத்த அரும் பெருங் துதிக்கமுடியாத அளவு; கீர்த்தியினானே! கீர்த்தியையுடையவனே!; நண்ணி நான் உன்னை நான் உன்னை நாடி; நாள் தொறும் தினந்தோறும்; ஏத்தும் நன்மையே துதிக்கும் நன்மையை தந்து; அருள் செய் எம்பிரானே! அருள்செய்யவேணும்
kāraṇā! the Cause of the universe; kal̤aivāṉe! the Remover of; iṭarai the sufferings of; ĕṇṇuvār those who are devoted to You; matucūtā! the Slayer of the demon Madhu!; kaṇṇaṉe! Kannan; kol̤ viṭuttāṉe! the One who eliminated; kari Gajendra's suffering; kāttavaṉe the One who protected; māri from rain; kuṭaiyāka by lifting as umbrella; vaṇṇa māl the beautiful and great; varaiye Govardhana mountain; aṭṭa! You are the One who destroyed the elephant; kal̤iṟu named Kuvalayapeedam; pirāṉe the Supreme Lord!; kīrttiyiṉāṉe! You possess immense glory to the extent; etta arum pĕruṅ You cannot be fully praised; naṇṇi nāṉ uṉṉai I come to You; nāl̤ tŏṟum every day; arul̤ cĕy ĕmpirāṉe! You must bless me with; ettum naṉmaiye the blessing of praising You