PAT 5.1.7

உன்னை அடையும் வழி கூறு

439 வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை
மெத்தையாகவிரித்து * அதன்மேலே
கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம்
காணலாங்கொல் என்றாசையினாலே *
உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி
உரோமகூபங்களாய் * கண்ணநீர்கள்
துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன்
சொல்லாய்யான்உன்னைத்தத்துறுமாறே.
439 vĕl̤l̤ai vĕl̤l̤attiṉ mel ŏru pāmpai * mĕttaiyāka virittu * ataṉ mele
kal̤l̤a nittirai kŏl̤kiṉṟa mārkkam * kāṇalāṅkŏl ĕṉṟu ācaiyiṉāle **
ul̤l̤am cora ukantu ĕtir vimmi * uroma kūpaṅkal̤āyk * kaṇṇa nīrkal̤
tul̤l̤am corat tuyil aṇai kŏl̤l̤eṉ * cŏllāy yāṉ uṉṉait tattuṟumāṟe (7)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

439. You pretend to sleep on the white flood of ocean on a snake bed, but when I want to see you sleeping on the snake bed, my heart becomes weak and I sob with happiness, my hair stands on end, my eyes shed tears and I cannot rest at all. O tell me, how I can reach you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெள்ளை நிர்மலமான; வெள்ளத்தின் மேல் ஜலத்தின் மேலே; ஒரு பாம்பை ஒப்பற்ற ஆதிசேஷனை; மெத்தையாக படுக்கையாக; விரித்து விரித்து; அதன் மேலே அதன் மீது; கள்ள நித்திரை யோகநித்திரை; கொள்கின்ற மார்க்கம் கொள்ளும் மார்க்கம்; காணலாங்கொல் என்று பார்க்கலாமோ என்கிற; ஆசையினாலே ஆசையினாலே; உள்ளம் சோர நெஞ்சு அழிய; உகந்து மகிழ்ச்சியின் மிகுதியால்; எதிர்விம்மி மனம் பூரித்து; உரோம உடலில்; கூபங்களாய் மயிர்க்கூச்செறிய; கண்ண நீர்கள் கண்களில் நீர்த்; துள்ளம் சோர துளிகள் சோர; துயில் அணை படுக்கையில் தூங்க; கொள்ளேன் முடியாதவனாய் உள்ளேன்; யான் உன்னை அடியேன் உன்னை; தத்துறுமாறே கிட்டும்வழியை; சொல்லாய் கூறுவாயே!
vĕl̤l̤ai upon the pure; vĕl̤l̤attiṉ mel water; mĕttaiyāka as His divine bed; ŏru pāmpai the matchless Adisesha; virittu spreading; ataṉ mele on that; kŏl̤kiṉṟa mārkkam You rests; kal̤l̤a nittirai in yogic slumber; ācaiyiṉāle my desire; kāṇalāṅkŏl ĕṉṟu to catch a glimpse; ul̤l̤am cora makes my heart melts away; ukantu overwhelmed by joy; ĕtirvimmi and my mind brimming; uroma my body; kūpaṅkal̤āy get goosebumps; tul̤l̤am cora and tears well up; kaṇṇa nīrkal̤ in my eyes; kŏl̤l̤eṉ I am unable to; tuyil aṇai sleep in the bed; cŏllāy please tell me; yāṉ uṉṉai your humble servant,; tattuṟumāṟe the path to reach You