PAT 5.1.6

நின் திருவடிகளை நினைக்காத நாளே பட்டினி நாள்

438 கண்ணா! நான்முகனைப்படைத்தானே!
காரணா! கரியாய்! அடியேன்நான் *
உண்ணாநாள்பசியாவதொன்றில்லை
ஓவாதேநமோநாரணாவென்று *
எண்ணாநாளும்இருக்கெசுச்சாம
வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம்
நண்ணாநாள் * அவைதத்துறுமாகில்
அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே.
438 kaṇṇā nāṉmukaṉaip paṭaittāṉe! * kāraṇā kariyāy aṭiyeṉ nāṉ *
uṇṇā nāl̤ paci āvatu ŏṉṟu illai * ovāte namo nāraṇā ĕṉṟu **
ĕṇṇā nāl̤um irukku ĕcuc cāma veta * nāl̤malar kŏṇṭu uṉa pātam
naṇṇā nāl̤! avai tattuṟumākil * aṉṟu ĕṉakku avai paṭṭiṉi nāl̤e (6)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

438. O dear lord, dark colored creator of the four-headed Nānmuhan and the reason for everything, even if I, your devotee, do not eat, I do not get hungry because worshiping you takes my hunger away. If there is a day when I do not think of you, and do not always say, “Namo Nārana” and do not recite Rig and Sama Vedās and do not place fresh flowers on your feet, that will be the day I starve.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ணா! கண்ணனே; நான்முகனை பிரம்மாவை; படைத்தானே! படைத்தவனே!; காரணா! அனைத்துக்கும் காரணமானவனே!; கரியாய்! கருத்த நிறமுடையவனே!; அடியேன் உனக்கு அடிமைப்பட்ட; நான் நான்; உண்ணா நாள் உண்ணாத தினத்தில்; பசி ஆவது பசி; ஒன்று இல்லை உண்டாவதில்லை; நமோ நாரணாவென்று நமோ நாராயணா என்று; ஓவாதே இடைவிடாமல்; எண்ணா நாளும் எண்ணாத நாளும்; இருக்கு எசு ருக் எஜுஸ்; சாம ஸாம வேதங்களைச் சொல்லி; வேத நாள் மலர் அப்போதலர்ந்த பூக்களை; கொண்டு கொண்டு வந்து; உன் பாதம் உன் திருவடிகளை; நண்ணா நாள் பணியாத நாள்; அவை தத்துறுமாகில் தட்டுப்படுமாகில்; அன்று எனக்கு அந்த நாள் எனக்குப்; அவை பட்டினி நாளே பட்டினி நாளாகும்
kaṇṇā! Oh Kanna; paṭaittāṉe! the creator of; nāṉmukaṉai Brahmma; kariyāy! oh dark colored One!; kāraṇā! who is cause for everything!; nāṉ I; aṭiyeṉ who is a servant of You; uṇṇā nāl̤ even when I do not eat; ŏṉṟu illai I am not; paci āvatu hungry; ĕṇṇā nāl̤um but if I don’t chant; namo nāraṇāvĕṉṟu namo Narayana; ovāte continuously; cāma and when I do not recite Sama; irukku ĕcu Rig and Yagur vedas; naṇṇā nāl̤ and if there is a day I fail to bow; uṉ pātam at your holy feet; avai tattuṟumākil and falter; veta nāl̤ malar to bring freshly blossomed flowers; kŏṇṭu for you; aṉṟu ĕṉakku that day; avai paṭṭiṉi nāl̤e becomes a day of fasting