PAT 5.1.4

அடியனைக் குடிமை கொள்க

436 நெடுமையால்உலகேழுமளந்தாய்!
நின்மலா! நெடியாய்! * அடியேனைக்
குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா
கூறைசோறுஇவைவேண்டுவதில்லை *
அடிமையென்னுமக்கோயின்மையாலே
அங்கங்கேஅவைபோதரும்கண்டாய் *
கொடுமைக்கஞ்சனைக்கொன்று நின்தாதை
கோத்தவன்தளைகோள்விடுத்தானே!
436 nĕṭumaiyāl ulakezhum al̤antāy * niṉmalā nĕṭiyāy aṭiyeṉaik *
kuṭimai kŏl̤vataṟku aiyuṟa veṇṭā * kūṟai coṟu ivai veṇṭuvatillai **
aṭimai ĕṉṉum ak koyiṉmaiyāle * aṅkaṅke avai potarum kaṇṭāy *
kŏṭumaik kañcaṉaik kŏṉṟu niṉ tātai * kotta vaṉ tal̤ai kol̤ viṭuttāṉe! (4)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

436. You, the pure, tall god, measured this world with your body. Do not hesitate to make me your slave. Though I do not want any clothes or food I still have not became your slave and am wandering here and there. O lord, you killed the cruel Kamsan and cut the chains of Vasudevan, your father, when he was in prison and released him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெடுமையால் திருவிக்கிரமனாக வளர்ந்து; உலகு ஏழும் உலகங்களையெல்லாம்; அளந்தாய் அளந்தாய்; நின்மலா! பரிசுத்தமானவனே!; நெடியாய்! தலைவனே!; கொடுமை கொடிய கர்மங்களைச்செய்யும்; கஞ்சனை கம்சனை; கொன்று கொன்று; நின் தாதை நின் தந்தை வஸுதேவருடைய; கோத்த காலில் பூட்டப்பட்டிருந்த; வன்தளை வலிய விலங்கின்; கோள் விடுத்தானே! பூட்டை அறுத்துப் போட்டவனே!; அடியேனை உனக்கு அடிமைப்பட்டுள்ள என்னை; குடிமை கொள்வதற்கு அடிமை கொள்வதற்கு; ஐயுற வேண்டா ஸந்தேகிக்க வேண்டியதில்லை; கூறை சோறு இவை ஆடையும் சோறுமாகிய இவை; வேண்டுவது இல்லை நான் உன்னிடத்து கேட்கவில்லை; அடிமை அடிமையென்ற; என்னும் ஒன்றையே வேண்டுகிறேன்; அக் கோயின்மையாலே அந்த ராஜகுலப் பெருமையால்; அங்கங்கே அவை அக்கூறை சோறு அவ்வவ்விடங்களில்; போதரும் கண்டாய் தாமாகவே கிடைக்கும்
nĕṭumaiyāl You grew as the glorious Trivikrama; al̤antāy and measured; ulaku eḻum all the worlds; niṉmalā! o Pure One!; nĕṭiyāy! o Supreme Lord!; kŏṉṟu You slew; kŏṭumai the wicked; kañcaṉai Kamsa; kol̤ viṭuttāṉe! You broke; vaṉtal̤ai the strong shackles; kotta that were fastened to the feet of; niṉ tātai Your father, Vasudeva; aṭiyeṉai I am already Your servant; aiyuṟa veṇṭā there is no need to doubt; kuṭimai kŏl̤vataṟku whether to accept me as one; veṇṭuvatu illai I do not ask You; kūṟai coṟu ivai for clothes or food; ĕṉṉum I ask only for one thing; aṭimai to be Your servant; ak koyiṉmaiyāle by the glory of serving in Your royal lineage; aṅkaṅke avai such things like clothes and food; potarum kaṇṭāy will come on their own