PAT 5.1.10

நாரணன் உலகை அடைவர்

442 காமர்தாதைகருதலர்சிங்கம்
காணவினியகருங்குழல்குட்டன் *
வாமனன்என்மரதகவண்ணன்
மாதவன்மதுசூதனன்தன்னை *
சேமநன்கமரும்புதுவையர்கோன்
விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும் *
நாமமென்றுநவின்றுரைப்பார்கள்
நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே. (2)
442 ## kāmar tātai karutalar ciṅkam * kāṇa iṉiya karuṅkuzhal kuṭṭaṉ *
vāmaṉaṉ ĕṉ marataka vaṇṇaṉ * mātavaṉ matucūtaṉaṉ taṉṉai **
cema naṉku amarum putuvaiyar koṉ * viṭṭucittaṉ viyaṉ tamizh pattum *
nāmam ĕṉṟu naviṉṟu uraippārkal̤ * naṇṇuvār ŏllai nāraṇaṉ ulake (10)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

442. He is Mādhavan and Madhusudanan, the emerald-colored father of Kama, a lion to his enemies who took the form of a dark-haired dwarf, dear to me. Vishnuchithan the chief of Puduvai that flourishes with goodness composed ten wonderful Tamil pāsurams on him. If devotees recite these pāsurams they will reach the world of Nāranan soon.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காமர் தாதை மன்மதனுக்குத் தந்தையும்; கருதலர் தன்னை நினையாதவருக்கு; சிங்கம் விரோதியாய்; காண இனிய காண்பவர்க்கு இனியனாய்; கருங்குழல் கறுத்த குழலையுடைய; குட்டன் சிறுவனும்; வாமனன் வாமனாவதாரம் செய்தவனும்; என் எனது; மரதக வண்ணன் மரகதப் பச்சை நிறமுடைய; மாதவன் மாதவனும்; மதுசூதனன் மதுசூதனனுமான; தன்னை எம்பெருமானைக் குறித்து அருளிச்செய்த; சேம நன்கு க்ஷேமங்கள் நன்றாக; அமரும் அமைந்திருக்கும்; புதுவையர் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்கு; கோன் தலைவரான; விட்டுசித்தன் பெரியாழ்வார்; வியன் தமிழ் பாடிய ஆச்சர்யமான தமிழ்ப்பாசுரங்கள்; பத்தும் பத்தையும்; நாமம் என்று எம்பெருமானது திருநாமங்களாக; நவின்று நினைத்து; உரைப்பார்கள் வாயார வாழ்த்துபவர்கள்; நண்ணுவார் ஒல்லை விரைவாக அடைவர்; நாரணன் உலகே ஸ்ரீவைகுண்டத்தை!
viṭṭucittaṉ Periazhwar; koṉ the leader of; putuvaiyar Sri Villiputhur; amarum where; cema naṉku prosperity flourises; taṉṉai composed these hymns describing the Lord as; kāmar tātai the Father of Manmatha; ciṅkam the enemy to; karutalar to those who do not think of You; kāṇa iṉiya to the seekers He is sweet; karuṅkuḻal the One with dark and curly locks of hair; kuṭṭaṉ young Boy; vāmaṉaṉ the One who took the Vamana avatar; ĕṉ his; marataka vaṇṇaṉ emerald-green-colored; mātavaṉ Madhava and; matucūtaṉaṉ Madhusudana; naviṉṟu those who think of these; pattum ten; viyaṉ tamiḻ pasurams (tamil hymns); nāmam ĕṉṟu as divine dames of the Lord; uraippārkal̤ and recite with their mouth; naṇṇuvār ŏllai will quickly reach; nāraṇaṉ ulake Sri Vaikuntam