PAT 4.8.7

காவிரி அரங்கனின் அடிதொழுமிடம் திருவரங்கம்

408 கொழுப்புடையசெழுங்குருதி கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய *
பிழக்குடையஅசுரர்களைப் பிணம்படுத்தபெருமானூர் *
தழுப்பரியசந்தனங்கள் தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு *
தெழிப்புடையகாவிரிவந்து அடிதொழும்சீரரங்கமே.
408 kŏzhuppu uṭaiya cĕzhuṅkuruti * kŏzhittu izhintu kumizhttu ĕṟiya *
pizhakku uṭaiya acurarkal̤aip * piṇam paṭutta pĕrumāṉ ūr **
tazhuppu ariya cantaṉaṅkal̤ * taṭavaraivāy īrttukkŏṇṭu *
tĕzhippu uṭaiya kāviri vantu * aṭitŏzhum cīr araṅkame (7)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

408. Srirangam is the divine place of the Lord who fought against the asuras, made them shed red blood that bubbled and flowed out with their fat and threw them as corpses This is the place where the Kaveri flows with abundant water, uprooting and carrying fragrant sandalwood trees from the huge mountains and placing them at the feet of the dear lord to worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தடவரைவாய் பெரிய மலைகளினின்று; தழுப்பு தழுவ முடியாத அளவு; அரிய பிரம்மாண்டமான; சந்தனங்கள் சந்தன மரங்களை; ஈர்த்துக் கொண்டு வேரோடு இழுத்துக் கொண்டு; தெழிப்பு உடைய இரைச்சலையுடைய; காவிரி வந்து காவிரி நதி வந்து; அடி பெருமானது திருவடிகளை; தொழும் சீர் தொழும் சிறப்பைப் பெற்றது; அரங்கமே திருவரங்கமே; கொழுப்பு உடைய கொழுப்பையுடைய; செழுங்குருதி செழுமையான ரத்தமானது; கொழித்து இழிந்து பொங்கி வழிய; குமிழ்த்து குமிழி கிளம்பி; எறிய அலை எறியும்படியாக; பிழக்கு உடைய தீமைகளைச் செய்கிற; அசுரர்களை அசுரர்களை; பிணம் படுத்த பிணமாக்கிய; பெருமான் ஊர் எம்பெருமானின் ஊர்
araṅkame it is Sri Rangam; kāviri vantu where cauvery river that runs; īrttuk kŏṇṭu uproots and bring; cantaṉaṅkal̤ sandalwood trees that; ariya are gigantic; taḻuppu and unable to embrace; taṭavaraivāy from the mountains; tĕḻippu uṭaiya with a roaring sound; tŏḻum cīr and surrenders; aṭi at the feet of the Lord; pĕrumāṉ ūr its the residing place of our Lord; piṇam paṭutta who destroyed; acurarkal̤ai the asuras; piḻakku uṭaiya who performed evil tasks; cĕḻuṅkuruti and made the blood; kumiḻttu bubbled and; kŏḻittu iḻintu flow from them; kŏḻuppu uṭaiya along with their fat; ĕṟiya and burnt them