PAT 4.6.9

முகில்வண்ணன் பெயரை இடுக

389 ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் * உங்கள்
மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு *
கோத்துக்குழைத்துக் குணாலமாடித்திரிமினோ *
நாத்தகு நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.
389 ūttaik kuzhiyil * amutam pāyvatu pol * uṅkal̤
mūttirap pil̤l̤aiyai * ĕṉ mukil vaṇṇaṉ per iṭṭu **
kottuk kuzhaittuk * kuṇālam āṭit tirimiṉo! *
nāt taku nāraṇaṉ * tam aṉṉai narakam pukāl̤ (9)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

389. Giving the name of the dark cloud-colored god to your children born in an unclean body is like pouring nectar into a dirty ditch. But if you wear the nāmam and dance and sing the praise of Nāranan who is never false to his promises, he will not send the mothers of your children to hell.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊத்தைக் குழியில் அசுத்தம் மிக்ககுழியிலே; அமுதம் பாய்வது போல் அமிர்தம் பாய்ந்தாற்போலே; உங்கள் மூத்திர உங்களுடைய அசுத்தனான; பிள்ளையை பிள்ளைக்கு; என்முகில்வண்ணன் என் மேகநிற எம்பெருமானின்; பேர் இட்டு பெயரை இட்டு; கோத்து எம்பெருமானுடன்சேர்ந்து; குழைத்து கலந்து; குணாலம் ஆடி கூத்தாடிக்கொண்டு; திரிமினோ! திரியுங்கள்; நாத் தகு நாவினால் துதிக்கத்தக்க; நாரணன் தம் நாராயணன் பெயரைக் கொண்ட; அன்னை பிள்ளையின் தாய்மார்கள்; நரகம் புகாள் நரகத்தை அடைய மாட்டார்கள்
amutam pāyvatu pol like a nectar flowing; ūttaik kuḻiyil into a dirty pond; uṅkal̤ mūttira for your impure; pil̤l̤aiyai child; per iṭṭu give the name of; ĕṉmukilvaṇṇaṉ my dark-colored Lord; kuḻaittu unite; kottu with the Lord; kuṇālam āṭi then dance and; tirimiṉo! roam; aṉṉai the mother of such a child; nāraṇaṉ tam named after Lord Narayana; nāt taku whose name has to be praised by the tongue; narakam pukāl̤ will not go to hell