PAT 4.2.6

சாந்தணிதோள் சதுரன் இருக்குமிடம் திருமாலிருஞ்சோலை

343 ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை *
சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை *
ஆவத்தனமென்று அமரர்களும்நன்முனிவரும் *
சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே.
343 eviṟṟuc cĕyvāṉ * eṉṟu ĕtirntu vanta mallarai *
cāvat takartta * cāntu aṇi tol̤ caturaṉ malai **
āvat-taṉam ĕṉṟu * amararkal̤um naṉ muṉivarum *
cevittirukkum * tĕṉ tirumāliruñ colaiye (6)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

343. The mountain of the clever god with lovely arms smeared with sandal paste who killed the wrestlers sent by his uncle Kamsan to oppose him is southern Thirumālirunjolai where the gods and the good sages worship him, saying that he is their refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அமரர்களும் தேவர்களும்; நன் முனிவரும் ஸனகாதி முனிவர்களும்; ஆவத்து ஆபத்துக்காலத்; தனம் என்று துணையாயிருக்குமென்று; சேவித்திருக்கும் சேவித்துக்கொண்டு இருக்குமிடம்; தென் திருமாலிருஞ்சோலையே தென் திருமாலிருஞ்சோலையே; ஏவிற்று கம்ஸன் ஏவின காரியங்களை; செய்வான் செய்து முடிப்பதற்காக; ஏன்று எதிர்ந்து வந்த துணிந்து எதிரிட்டுவந்த; மல்லரை சாணுரன் முஷ்டிகன் முதலிய மல்லர்களை; சாவத் தகர்த்த முடியும்படியாக அழித்த; தோள் தோள்களையுடைய; சதுரன் மலை கண்ணபிரான் இருக்கும் மலை
amararkal̤um the devas and; naṉ muṉivarum the sages like Sanaka and others; āvattu in times of danger; taṉam ĕṉṟu to get the support; cevittirukkum they reside in; tĕṉ tirumāliruñcolaiye southern Thirumalirunjolai; eviṟṟu orchestrated by Kamsa; cĕyvāṉ to put an end to Kannan; mallarai wrestlers like Chanura and Mushtika; eṉṟu ĕtirntu vanta courageously came forward; cāvat takartta who were destroyed completely; tol̤ by the One with broad shoulders (Kannan); caturaṉ malai its the mountain where Kannan resides