PAT 4.2.5

கம்சனது யானையைக் கொண்றவன் மலை

342 ஒருவாரணம் பணிகொண்டவன்பொய்கையில் * கஞ்சன்தன்
ஒருவாரணம் உயிருண்டவன்சென்றுறையும்மலை *
கருவாரணம் தன்பிடிதுறந்தோட * கடல்வண்ணன்
திருவாணைகூறத்திரியும் தண்திருமாலிருஞ்சோலையே.
342 ŏru vāraṇam * paṇi kŏṇṭavaṉ pŏykaiyil * kañcaṉtaṉ
ŏru vāraṇam * uyir uṇṭavaṉ cĕṉṟu uṟaiyum malai **
karu vāraṇam * taṉ piṭi tuṟantu oṭak * kaṭalvaṇṇaṉ
tiruvāṇai kūṟat tiriyum * taṇ māliruñ colaiye (5)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

342. The mountain of the lord who saved Gajendra when a crocodile caught him in a pond, and destroyed Kamsan, strong as an elephant, is fertile Thirumālirunjolai where the strong male elephant searched for his mate that was angry and had left him, and when he could not find her, he promised on the dark ocean-colored god that he would behave when she returned.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரு வாரணம் கறுத்ததொரு யானை; தன் பிடி தனது பேடையானது; துறந்து ஓட தன்னைவிட்டு ஓட; கடல் வண்ணன் கடல் போன்ற நிறமுடையவன்; திருவாணை கூற மேல் ஆணை என்று கூற; திரியும் பேடை கட்டுப்பட்டு நின்ற இடம்; தண் திருமாலிருஞ்சோலையே குளிர்ந்த திருமாலிருஞ்சோலை; ஒரு வாரணம் கஜேந்திரன் என்னும் யானையிடமிருந்து; பணிகொண்டவன் கைங்கர்யத்தை ஏற்றவனும்; பொய்கையில் பொய்கையில்; கஞ்சன்தன் கம்சனுடைய; ஒரு வாரணம் ஒரு யானையான குவலயாபீடத்தின்; உயிருண்டவன் உயிரை முடித்தவனுமான கண்ணன்; சென்று எழுந்தருளி; உறையும் மலை நித்திய வாசம் செய்யும் மலை
karu vāraṇam a black elephant; taṉ piṭi when its female mate; tuṟantu oṭa ran away; tiruvāṇai kūṟa the male elephant took a vow in the name of; kaṭal vaṇṇaṉ the One with a color like the sea (Kannan); tiriyum to behave well when she returned; taṇ tirumāliruñcolaiye at Thirumalirunjolai; paṇikŏṇṭavaṉ the One who accepted service; ŏru vāraṇam from the elephant named gajendra; uyiruṇṭavaṉ Krishna, the one who ended the life of; ŏru vāraṇam the elephant named kuvalayapida that belonged; kañcaṉtaṉ to Kamsa; pŏykaiyil in the waters; cĕṉṟu who went and; uṟaiyum malai reside in this mountain