PAT 4.2.4

கற்பகத்தேனாறு பாயும் திருமாலிருஞ்சோலை

341 ஆனாயர்கூடி அமைத்தவிழவை * அமரர்தம்
கோனார்க்கொழியக் கோவர்த்தனத்துச்செய்தான்மலை *
வானாட்டில்நின்று மாமலர்க்கற்பகத்தொத்திழி *
தேனாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே.
341 āṉāyar kūṭi * amaitta vizhavai * amarartam
koṉārkku ŏzhiyak * kovarttaṉattuc cĕytāṉ malai **
vāṉ nāṭṭiṉiṉṟu * māmalark kaṟpakat tŏttu izhi *
teṉ āṟu pāyum * tĕṉ tirumāliruñ colaiye (4)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

341. The mountain of the god who carried Govardhanā mountain (Madhura) to save the cows and the family of the cowherds when Indra, the king of the gods, tried to destroy their festival with a storm is the southern Thirumālirunjolai where a river of honey flows just like the river that flows in the Karpaga garden blooming with lovely flowers.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வான் நாட்டினின்று சுவர்க்கலோகத்திலுள்ள; மா மலர் பெரிய பூக்கள் நிறைந்த; கற்பக கற்பக மரத்தின்; தொத்து இழி பூங்கொத்திலிருந்து பெருகும்; தேன் ஆறு தேனானது ஆறாகப் பெருகி; பாயும் தென் பாய்கின்ற தென்; திருமாலிருஞ்சோலையே திருமாலிருஞ்சோலை; ஆனாயர் கூடி பசுக்களுடைய ஆயர்கள் ஒன்று சேர்ந்து; அமைத்த இந்திரனுக்காக ஏற்படுத்தின; விழவை விழாவை; அமரர் தம் தேவர்களுடைய; கோனார்க்கு தலைவனான இந்திரனுக்கு; ஒழிய சேரவொட்டாமல் தடுத்து; கோவர்த்தனத்து கோவர்த்தன மலைக்குச் சேரும்படி; செய்தான்மலை செய்தருளின பிரானுடைய திருமலை
tirumāliruñcolaiye Thirumalirunjolai; teṉ āṟu where, just like the river, honey; pāyum tĕṉ flows; tŏttu iḻi from; mā malar the large flowers; kaṟpaka of karpaga trees; vāṉ nāṭṭiṉiṉṟu in the heavens; cĕytāṉmalai by the grace of Lord of the hill; ŏḻiya who prevented the sacrifice from going to; koṉārkku Indra, the leader of; amarar tam devas; āṉāyar kūṭi when the family of the cowherds came together; viḻavai and organized a festival; amaitta for Indra; kovarttaṉattu and diverted the sacrifice to govardana hill