PAT 4.2.10

பிடியும் களிறும் திளைக்கும் திருமாலிருஞ்சோலை

347 எட்டுத்திசையும் எண்ணிறந்தபெருந்தேவிமார் *
விட்டுவிளங்க வீற்றிருந்தவிமலன்மலை *
பட்டிப்பிடிகள் பகடுரிஞ்சிச்சென்று * மாலைவாய்த்
தெட்டித்திளைக்கும் தென்திருமாலிருஞ்சோலையே.
347 ĕṭṭut ticaiyum * ĕṇ- iṟanta pĕrun tevimār *
viṭṭu vil̤aṅka * vīṟṟirunta vimalaṉ malai **
paṭṭip piṭikal̤ * pakaṭu uriñcic cĕṉṟu * mālaivāyt
tĕṭṭit til̤aikkum * tĕṉ tirumāliruñ colaiye (10)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

347. The mountain of the faultless god who stays in majesty surrounded by his many beautiful queens shining in all the eight directions is southern Thirumālirunjolai where village cows play with their bulls and in the evening go back and think of the happiness that they enjoyed together.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாலைவாய் மாலை நேரத்திலே; பட்டி பட்டியில் இருக்கவேண்டிய; பிடிகள் யானைப் பேடைகளானவை; பகடு ஆண் யானைகளோடு; உறிஞ்சிச்சென்று உராய்ந்து சென்று; தெட்டி அதனால் உண்டாகும் ஆனந்தத்தில்; திளைக்கும் களிக்கும் மலை; தென் திருமாலிருஞ்சோலையே தென் திருமாலிருஞ்சோலையே; எண்ணிறந்த கணக்கிட முடியாத; பெருந் தேவிமார் பெருமை பொருந்திய தேவிமார்கள்; எட்டுத் திசையும் எட்டுத்திக்குகளிலும்; விட்டு விளங்க மிகவும் பிரகாசம் ஒளிர விளங்கும்; வீற்று துவாரகையில் அவர்கள் நடுவில்; இருந்த இருந்த; விமலன் மலை நிர்மலமான பிரானின் மலை
tĕṉ tirumāliruñcolaiye it is southern Thirumalirunjolai!; pakaṭu where male elephants; uṟiñciccĕṉṟu mingle; piṭikal̤ with elephant herds; paṭṭi the ones that must be on the shore; mālaivāy in the evenings; til̤aikkum and delights; tĕṭṭi from the bliss that arises from; ĕṇṇiṟanta numerous; pĕrun tevimār great goddesses; viṭṭu vil̤aṅka shining brightly across; ĕṭṭut ticaiyum all eight directions; vīṟṟu reside; irunta in; vimalaṉ malai the mountain of the pure one (Lord Kannan)