PAT 4.1.9

பூமிபிராட்டியோடு வராகப் பெருமாள்

336 மண்ணும்மலையும்மறிகடல்களும் மற்றும்யாவுமெல்லாம் *
திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல் *
எண்ணற்கரியதோரேனமாகி இருநிலம்புக்கிடந்து *
வண்ணக்கருங்குழல்மாதரோடு மணந்தானைக்கண்டாருளர்.
336 maṇṇum malaiyum maṟikaṭalkal̤um * maṟṟum yāvum ĕllām *
tiṇṇam vizhuṅki umizhnta tevaṉaic * cikkĕṉa nāṭutirel **
ĕṇṇaṟku ariyatu or eṉam āki * irunilam pukku iṭantu *
vaṇṇak karuṅkuzhal mātaroṭu * maṇantāṉaik kaṇṭār ul̤ar (9)

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

336. If you are searching anxiously for our lord who swallowed the earth, the mountains, the wavy oceans and everything else and spat them out, go to the people who saw him when he became a boar that no one can imagine, dug up the ground and brought the earth from the underworld and married the earth goddess with lovely dark hair.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மண்ணும் பூமியையும்; மலையும் மலைகளையும்; மறிகடல்களும் அலை கடல்களையும்; மற்றும் யாவும் மற்றுமுண்டான; எல்லாம் எல்லாப் பொருள்களையும்; திண்ணம் நிச்சயமாக; விழுங்கி பிரளய காலத்தில் விழுங்கி; உமிழ்ந்த பின்பு உமிழ்ந்து வெளிப்படுத்தின; தேவனை கண்ணனை; சிக்கென நாடுதிரேல் தேடுகிறீர்களாகில்; எண்ணற்கு அரியது நினைக்க முடியாத ஒப்பற்ற; ஓர் ஏனம் ஆகி ஓர் வராக அவதாரமெடுத்து; இரு நிலம் பெரிய பூமியை; புக்கு அண்டப் பித்தியிலிருந்து மூழ்கி; இடந்து இடறி எடுத்து; வண்ணக் கருங்குழல் கரு நிறக் கூந்தலையுடைய; மாதரோடு பூமிப்பிராட்டியை; மணந்தானை மணந்தவனை; கண்டார் உளர் பார்த்தவர்கள் உள்ளனர்
cikkĕṉa nāṭutirel if you are searching for; tevaṉai Kannan; tiṇṇam who for sure; viḻuṅki at the time of dissolution, swallow; maṇṇum the earth; malaiyum the mountains; maṟikaṭalkal̤um the wavy oceans; ĕllām and everything; maṟṟum yāvum else; umiḻnta and spat them out; kaṇṭār ul̤ar there are those who have seen; or eṉam āki Him incarnated as boar that was; ĕṇṇaṟku ariyatu the unthinkable and incomparable; pukku dove deep into the ocean; iṭantu and lifted; iru nilam the big eath; maṇantāṉai and married; mātaroṭu the earth goddess (Bhudevi); vaṇṇak karuṅkuḻal who has dark black hair