PAT 4.1.3

கடற்கரையில் இராமன்

330 கொலையானைக்கொம்புபறித்துக் கூடலர்சேனைபொருதழிய *
சிலையால்மராமரமெய்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல் *
தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று தடவரைகொண்டடைப்ப *
அலையார்கடற்கரைவீற்றிருந்தானை அங்குத்தைக்கண்டாருளர்.
330 kŏlaiyāṉaik kŏmpu paṟittuk * kūṭalar ceṉai pŏrutu azhiyac *
cilaiyāl marāmaram ĕyta tevaṉaic * cikkĕṉa nāṭutirel **
talaiyāl kurakkiṉam tāṅkic cĕṉṟu * taṭavarai kŏṇṭu aṭaippa *
alai ār kaṭaṟkarai vīṟṟiruntāṉai * aṅkuttaik kaṇṭār ul̤ar (3)

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

330. If you are searching anxiously for him who broke the tusks of the murderous elephant, and pierced seven trees with a single arrow go to the people who saw him seated on the seashore where the monkey clan carried large stones on their heads and made a bridge on the ocean amidst rolling waves.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொலை கொல்வதற்காக வந்த குவலயாபீட; யானைக் கொம்பு யானையின் தந்தங்களை; பறித்து பறித்து; கூடலர் சேனை ராக்ஷசர்களின் சேனை; பொருதழிய அழியும்படி போர் செய்தவனுமான; சிலையால் வில்லால்; மராமரம் ஏழு மரங்களை; எய்த ஒரே அம்பால் துளைத்த; தேவனை இராமபிரானை; சிக்கென திண்ணமாகத்; நாடுதிரேல் தேடுகிறீர்களாகில்; குரக்கினம் வாநர ஸேனையானது; தலையால் தலைகளினால்; தாங்கிச்சென்று சுமந்து கொண்டுபோய்; தடவரை கொண்டு பெரிய மலைகளால்; அடைப்ப கடலில் அணையாக அடைக்க; அலையார் கடற்கரை அலையெறிகிற கடற்கரையிலே; வீற்றிருந்தானை வீற்றிருந்த இராமபிரானை; அங்குத்தை அந்த ஸ்தலத்திலே; கண்டார் உளர் பார்த்தவர்கள் உள்ளனர்
paṟittu As Krishna He plucked; yāṉaik kŏmpu tusks of the elephant; kŏlai Kovalaya, who came kill; pŏrutaḻiya He fought a war and destroyed; kūṭalar ceṉai the army of demons; nāṭutirel if you are searching; cikkĕṉa diligently for; tevaṉai Rama; cilaiyāl who from a bow and; ĕyta with one arrow He destroyed; marāmaram seven trees; kaṇṭār ul̤ar there are those who have seen; vīṟṟiruntāṉai Rama seated; aṅkuttai on the seashore; kurakkiṉam when monkeys; tāṅkiccĕṉṟu carried; taṭavarai kŏṇṭu stones; talaiyāl on their heads; aṭaippa and built a bridge on the ocean; alaiyār kaṭaṟkarai amidst rolling waves