PAT 4.1.10

பரமனடி சேர்வர்

337 கரியமுகில்புரைமேனிமாயனைக் கண்டசுவடுரைத்து *
புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி விளைகழனிப்புதுவை *
திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும் *
பரவுமனமுடைப்பத்தருள்ளார் பரமனடிசேர்வர்களே. (2)
337 ## kariya mukil purai meṉi māyaṉaik * kaṇṭa cuvaṭu uraittu *
puravi mukamcĕytu cĕnnĕl oṅki * vil̤ai kazhaṉip putuvai **
tiruvil pŏli maṟaivāṇaṉ * paṭṭarpirāṉ cŏṉṉa mālai pattum *
paravum maṉam uṭaip pattar ul̤l̤ār * paramaṉ aṭi cervarkal̤e (10)

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

337. The Pattarpiran of Puduvai where good paddy grows in fertile fields describes in pāsurams the places where the devotees who search for the dark cloud-colored god can find him. If devotees recite these ten pāsurams and praise him in their hearts they will reach the feet of the supreme god.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரிய முகில் புரை கருத்த மேகத்தை ஒத்த; மேனி மாயனை மேனியுடையக் கண்ணனை; கண்ட சுவடு பார்த்த அடையாளங்களைச்; உரைத்து சொல்லி; புரவி முகம் குதிரை முகம்போலத்; செய்து தலைவணங்கி; செந்நெல் ஓங்கி செந்நெற் பயிர்கள் உயர்ந்து; விளை கழனிப் விளையும் வயல்களையுடைய; புதுவை ஸ்ரீவில்லிபுத்தூரரில்; திருவில் வைணவப்; பொலி பொலிவுடன் இருப்பவரான; மறைவாணன் வேதத்துக்கு விற்பன்னருமான; பட்டர்பிரான் பெரியாழ்வார்; சொன்ன அருளிய; மாலை பத்தும் பத்துப் பாசுரங்களையும்; பரவு மனம் உடை அனுசந்திக்கும் மனம் உடைய; பத்தர் உள்ளார் பக்தர்களாயிருப்பவர்கள்; பரமனடி கண்ணன் திருவடிகளை; சேர்வர்களே அடைவார்களே
pattar ul̤l̤ār those devotees who; paravu maṉam uṭai recite; mālai pattum these ten pasurams; cŏṉṉa writted by; paṭṭarpirāṉ Periazhwar; maṟaivāṇaṉ an expert of vedas; pŏli and one with radiance of; tiruvil Vaishnavism; putuvai the one who resided in Sri Villiputhur; vil̤ai kaḻaṉip where; cĕnnĕl oṅki red paddy crops grow and then; cĕytu bow the head; uraittu that describe the; puravi mukam like the face of a horse; kaṇṭa cuvaṭu places where the devotees who search can find; kariya mukil purai the dark cloud-colored; meṉi māyaṉai Kannan; cervarkal̤e will reach; paramaṉaṭi the feet of Kannan