PAT 3.8.9

உலகளந்தான் என் மகளை ஆள்வானோ?

305 வெண்ணிறத்தோய்தயிர்தன்னை வெள்வரைப்பின்முன்எழுந்து *
கண்ணுறங்காதேயிருந்து கடையவும்தான்வல்லள்கொலோ? *
ஒண்ணிறத்தாமரைச்செங்கண் உலகளந்தான்என்மகளை *
பண்ணறையாப்பணிகொண்டு பரிசறஆண்டிடுங்கொலோ?
305 vĕṇṇiṟat toy tayir taṉṉai * vĕl̤varaippiṉ muṉ ĕzhuntu *
kaṇ uṟaṅkāte iruntu * kaṭaiyavum tāṉvallal̤ kŏlo? **
ŏṇṇiṟat tāmaraic cĕṅkaṇ * ulakal̤antāṉ ĕṉmakal̤ai *
paṇ aṟaiyāp paṇikŏṇṭu * paricu aṟa āṇṭiṭuṅ kŏlo? (9)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

305. Can my daughter wake up before dawn and churn the white yogurt, losing good sleep? Will he, with shining lotus eyes, who measured the world, make her do hard work or will he keep her happy?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெண்ணிறத் தோய் நல்ல வெளுப்பாக தோய்ந்த; தயிர் தன்னை தயிரை; வெள்வரைப்பின் கிழக்கு வெளுப்பதற்கு; முன் எழுந்து முன்பாக எழுந்து; கண் உறங்காதே கண்ணுறங்காமல்; கடையவும் கடைவதற்கு; தான் வல்லள் கொல்லோ? சக்தி உடையவள் தானோ?; ஒண்ணிறத் தாமரை அழகிய தாமரை போன்ற; செங்கண் சிவந்த கண்களையுடையவனும்; உலகளந்தான் திருவிக்கிரமனான கண்ணன்; என் மகளை என் பெண்ணை; பண் அறையா சாதாரணமான; பணி கொண்டு பணி செய்ய வைத்து; பரிசற அவள் பெருமை கெட; ஆண்டிடுங் கொலோ? ஆள்வானோ? அறியேன்
tāṉ vallal̤ kŏllo? is she not the one with the strength?; muṉ ĕḻuntu to rise; vĕl̤varaippiṉ before dawn; kaṇ uṟaṅkāte and without closing her eyes; kaṭaiyavum churn; vĕṇṇiṟat toy the good white; tayir taṉṉai curd; ulakal̤antāṉ Kannan, who is Thiruvikraman; cĕṅkaṇ the One with red eyes like; ŏṇṇiṟat tāmarai beautiful lotus; ĕṉ makal̤ai make my daughter; paṇi kŏṇṭu engage in; paṇ aṟaiyā ordinary tasks; paricaṟa and ruin her honor?; āṇṭiṭuṅ kŏlo? I do not know