PAT 3.8.7

பெருமான் என் மகளை என்ன செய்வானோ?

303 அண்டத்தமரர்பெருமான் ஆழியான்இன்றுஎன்மகளை *
பண்டப்பழிப்புக்கள்சொல்லிப் பரிசறஆண்டிடுங்கொலோ? *
கொண்டுகுடிவாழ்க்கைவாழ்ந்து கோவலப்பட்டம்கவித்து *
பண்டைமணாட்டிமார்முன்னே பாதுகாவல்வைக்குங்கொலோ?
303 aṇṭattu amarar pĕrumāṉ * āzhiyāṉ iṉṟu ĕṉmakal̤ai *
paṇṭap pazhippukkal̤ cŏllip * paricu aṟa āṇṭiṭuṅ kŏlo? **
kŏṇṭu kuṭi- vāzhkkai vāzhntu * kovalap paṭṭam kavittu *
paṇṭai maṇāṭṭimār muṉṉe * pātukāval vaikkuṅ kŏlo? (7)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

303. Will the Lord of this cosmos, the One who holds a discus(chakra) accept my daughter and treat her with respect, without blaming her? Will he lead a virtuous life, making her the chief of cowherd clan and give her the rights due amidst his other consorts in the palace?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அண்டத்து வைகுந்தத்தில் இருப்பவனும்; அமரர் பெருமான் நித்யசூரிகளுக்கு தலைவனுமான; ஆழியான் சக்ராயுதத்தை உடையவனான கண்ணன்; இன்று என் மகளை என் பெண்ணை இன்று; பண்டப் பழிப்புக்கள் அழகிலோ குணத்திலோ; சொல்லி குறைகள் கூறி; பரிசு அற தகுதியற்றவள் என்று; ஆண்டிடுங் கொல்லோ? மட்டமாக நடத்துவானோ?; கொண்டு இவளை ஏற்று; குடி வாழ்க்கை நல்லதோர் வாழ்க்கை; வாழ்ந்து வாழ்ந்து; கோவல ஆயர்குல தலைவி; பட்டம் கவித்து என்ற பட்டம் கட்டி; பண்டை ஏற்கனவே இருக்கும்; மணாட்டிமார் மனைவிமார்; முன்னே முன்பு; பாதுகாவல் தனி உரிமை கொடுத்து; வைக்கும் அந்தப்புரத்திலே; கொலோ? வைத்துக்கொள்வானோ?
āḻiyāṉ will Kannan who wields the discus and; aṇṭattu who resides in Vaikuntha; amarar pĕrumāṉ and is the Leader of the eternal celestial beings; āṇṭiṭuṅ kŏllo? badly treat; iṉṟu ĕṉ makal̤ai my daughter; cŏlli by pointing out flaws; paṇṭap paḻippukkal̤ in her beauty or character; paricu aṟa and calling her unworthy; kŏṇṭu instead, will He accept her; vāḻntu live; kuṭi vāḻkkai a good life with her; paṭṭam kavittu crown her with the title of; kovala the leader of the Ayar clan; pātukāval while granting her rights as his wife; muṉṉe alongside; paṇṭai the already existing; maṇāṭṭimār wives; vaikkum and place her; kŏlo? in His palace?