PAT 3.8.6

பெருமானைக் கைப்பற்றுவாளோ?

302 வேடர்மறக்குலம்போலே வேண்டிற்றுச்செய்துஎன்மகளை *
கூடியகூட்டமேயாகக் கொண்டுகுடிவாழுங்கொலோ? *
நாடுநகரும்அறிய நல்லதோர்கண்ணாலம்செய்து *
சாடிறப்பாய்ந்தபெருமான் தக்கவாகைப்பற்றுங்கொலோ?
302 veṭar maṟakkulam pole * veṇṭiṟṟuc cĕytu ĕṉmakal̤ai *
kūṭiya kūṭṭame yākak * kŏṇṭu kuṭi vāzhuṅ kŏlo? **
nāṭu nakarum aṟiya * nallatu or kaṇṇālam cĕytu *
cāṭu iṟap pāynta pĕrumāṉ * takkavā kaippaṟṟuṅ kŏlo? (6)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

302. Like the hunters and fighters who lead life as they wish, will they lead life together? Will they perform marriage ceremonies and rituals? Will Kannan, who killed the asura who came as a cart, hold my daughter's hand in marriage, according to tradition?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேடர் வேடர்களையும்; மறக்குலம் போலே மறவர்களையும் போல்; வேண்டிற்றுச் செய்து தன் இஷ்டப்படி செய்து; என் மகளை என் மகளை; கூடிய காதலித்துக் கூடின கூடுதலையே; கூட்டமேயாகக் கொண்டு விவாஹமாகக் கொண்டு; குடி வாழும் வாழ்க்கை; கொலோ? நடத்துவார்களோ அல்லது; நாடு நகரும் அறிய நாட்டாரும் நகரத்தாரும் அறிய பகிரங்கமாக; நல்லதோர் லக்ஷணமாக விதிப்படி; கண்ணாலம் செய்து திருமணம் செய்வார்களோ அல்லது; சாடு இற சகடத்தை முறியும்படி; பாய்ந்த பெருமான் செய்த கண்ணன்; தக்கவா ஜாதி தர்மத்துக் கேற்றவாறு; கைப்பற்றுங் கொலோ? கைப்பிடித்து மணம் கொள்வனோ?
veṭar like the hunters; maṟakkulam pole and fighters; veṇṭiṟṟuc cĕytu who lead life as they wish; kūṭiya will the love that leads to intimacy with; ĕṉ makal̤ai my daughter; kūṭṭameyākak kŏṇṭu be considered as marriage; kŏlo? and lead together; kuṭi vāḻum their life; kaṇṇālam cĕytu or will they arrange a wedding ceremony; nallator with rituals and customs; nāṭum nakarum aṟiya so that the public know; pāynta pĕrumāṉ or Kannan; cāṭu iṟa who killed the asura who came as a cart; takkavā follow the caste-dharma and; kaippaṟṟuṅ kŏlo? hold my daughter's hand in marriage accordingly