PAT 3.8.5

மகளைப் பெற்ற தாயின் நிலை

301 தம்மாமன்நந்தகோபாலன் தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னை *
செம்மாந்திரேயென்றுசொல்லிச் செழுங்கயற்கண்ணும்செவ்வாயும் *
கொம்மைமுலையும்இடையும் கொழும்பணைத்தோள்களும்கண்டிட்டு *
இம்மகளைப்பெற்றதாயர் இனித்தரியாரென்னுங்கொலோ?
301 tam māmaṉ nantakopālaṉ * tazhīik kŏṇṭu ĕṉ makal̤ taṉṉai *
cĕmmāntire ĕṉṟu cŏlli * cĕzhuṅ kaya1 kaṇṇum cĕvvāyum **
kŏmmai mulaiyum iṭaiyum * kŏzhumpaṇait tol̤kal̤um kaṇṭiṭṭu *
im makal̤aip pĕṟṟa tāyar * iṉit tariyār ĕṉṉuṅ kŏlo? (5)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

301. Will Nandagopan, my daughter's father-in-law embrace her and say, “I am proud to have you as my daughter-in-law?” Seeing her lovely fish eyes, red mouth, round breasts, waist and beautiful arms, will he say, “How can the mother of one like you be able live apart from you?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தம் மாமன் என் பெண்ணின் மாமனாரான; நந்தகோபாலன் நந்தகோபாலன்; தழீஇ அணைத்து மடியிலே; கொண்டு வைத்துக்கொண்டு; என் மகள் தன்னை என் மகளை; செம்மாந்திரே நிமிர்ந்து உட்கார்; என்று சொல்லி என்று சொல்லி; செழுங் கயல் அழகிய மீனின் கண்களைப் போன்ற; கண்ணும் கண்களையும்; செவ்வாயும் சிவந்த வாயையும்; கொம்மை முலையும் திரண்ட மார்பையும்; இடையும் இடையையும்; கொழும்பணை மூங்கிலை ஒத்த; தோள்களும் தோள்களையும்; கண்டிட்டு பார்த்துவிட்டு; இம் மகளை இந்தப் பெண்ணை; பெற்ற தாயர் பெற்ற தாயார்; இனி இவளைப்பிரிந்த பின்பு; தரியார் உயிரோடு இருக்கமாட்டாள்; என்னுங் கொலோ? என்று கூறுவாரோ?
tam māmaṉ would my daughter's father in-law; nantakopālaṉ Nandagopar; taḻīi embrace and on his lap; kŏṇṭu have my daughter sit; ĕṉṟu cŏlli and woud he tell; ĕṉ makal̤ taṉṉai her; kaṇṭiṭṭu after seeing her; cĕmmāntire to sit erect; cĕḻuṅ kayal lovely fish-like; kaṇṇum eyes; cĕvvāyum red mouth; kŏmmai mulaiyum round breasts; iṭaiyum waist; kŏḻumpaṇai and bamboo like; tol̤kal̤um beautiful arms; ĕṉṉuṅ kŏlo? would he say?; pĕṟṟa tāyar that the mother of; im makal̤ai this girl; tariyār will not be alive; iṉi after separating from her