PAT 3.8.1

மாயவன் பின்சென்ற மகளை நினைத்துத் தாய் பலபடியாகக் கூறி ஏங்குதல் மல்லரை அட்டவன் பின் சென்றாளோ?

297 நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேல்பனிசோர *
அல்லியும்தாதும்உதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்ததாலோ *
இல்லம்வெறியோடிற்றாலோ என்மகளைஎங்கும்காணேன் *
மல்லரையட்டவன்பின்போய் மதுரைப்புறம்புக்காள்கொலோ? (2)
297 ## nallatu or tāmaraip pŏykai * nāṇmalar mel paṉi cora *
alliyum tātum utirntiṭṭu * azhakazhintāl ŏttatālo **
illam vĕṟiyoṭiṟṟālo ! * ĕṉmakal̤ai ĕṅkum kāṇeṉ *
mallarai aṭṭavaṉ piṉpoy * maturaip puṟam pukkāl̤ kŏlo? (1)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

297. Like a pond that has lost its beauty because the falling dew has made fresh lotuses shed their petals and the blossoms to shed their pollen, my house looks empty. I haven’t seen my daughter anywhere. Did she go towards Madhura city following Him who destroyed the Asurans, when they came disguised as wrestlers?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல்லது ஓர் அழகில் ஒப்பற்ற; தாமரைப் பொய்கை தாமரைக் குளமானது; நாண் மலர் மேல் அப்போது அலர்ந்த மலர் மேல்; பனி சோர பனி பெய்ததனால்; அல்லியும் தாதும் இதழ்களும் மகரந்தப் பொடிகளும்; உதிர்ந்திட்டு உதிர்ந்து போய்; அழகழிந்தால் ஒத்ததாலோ! அழகு அழிந்து போவது போல; இல்லம் இவ்வீடானது; வெறியோடிற்றாலோ! வெறிச்சிட்டுள்ளது; என் மகளை என் மகளை; எங்கும் காணேன் எங்கும் காணவில்லை; மல்லரை சாணூரன் முஷ்டிகன் போன்ற மல்லர்களை; அட்டவன் பின் போய் அழித்த கண்ணன்பின்னே போய்; மதுரைப் புறம் மதுரைக்கு அருகிலுள்ள திருவாய்ப்பாடிக்கு; புக்காள் கொலோ? போனாளோ என்னவோ?
nallatu or just like how the incomparably; tāmaraip pŏykai beautiful pond with lotuses; aḻakaḻintāl ŏttatālo! loses its beauty; paṉi cora when dew drops fall; nāṇ malar mel on the lotuses; alliyum tātum making the petals and pollens; utirntiṭṭu to fall off; illam this house; vĕṟiyoṭiṟṟālo! looks deserted; ĕṉ makal̤ai my daughter; ĕṅkum kāṇeṉ is not seen anywhere; pukkāl̤ kŏlo? did she go; maturaip puṟam to Madhura; aṭṭavaṉ piṉ poy to meet Kannan who killed the; mallarai wrestlers chanuran and mushtikan