PAT 3.6.8

குழலிசையில் பறவைகளும் கறவைகளும் மயங்கின

282 சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச்
செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிப்ப *
குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது *
பறவையின்கணங்கள்கூடுதுறந்து
வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப *
கறவையின்கணங்கள்கால்பரப்பிட்டுக்
கவிழ்ந்திறங்கிச்செவியாட்டகில்லாவே.
282 ciṟuviralkal̤ taṭavip parimāṟac * cĕṅkaṇ koṭac cĕyya vāy kŏppal̤ippa *
kuṟuvĕyarp puruvam kūṭalippak * kovintaṉ kuzhalkŏṭu ūtiṉa potu **
paṟavaiyiṉ kaṇaṅkal̤ kūṭu tuṟantu * vantu cūzhntu paṭukāṭu kiṭappak *
kaṟavaiyiṉ kaṇaṅkal̤ kāl parappiṭṭuk * kavizhntu iṟaṅkic cĕvi āṭṭakillāve (8)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

282. When Govindan plays the flute holding it in his small fingers, as his beautiful eyes close, his red cheeks puff out and his brow sweats with small drops of water, flocks of birds leave their nests, come and surround him like uprooted forests. Herds of cattle leave the forest where they graze, come near Govindan, and lie down spreading their legs apart. They bend their heads, listening to the music of the flute and move their ears as if they are dancing.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிறு விரல்கள் சிறிய கைவிரல்கள்; தடவிப் பரிமாற புல்லாங்குழலைத் தடவிப் பரிமாற; செங்கண் கோட சிவந்த கண்கள் வளைந்து பார்க்க; செய்ய வாய் கொப்பளிப்ப சிவந்த வாயைக் குவித்தபடி; குறு வெயர்ப் புருவம் புருவம் மேல் பக்கமாக; கூடலிப்ப வளைய; கோவிந்தன் கண்ணபிரான்; குழல் கொடு புல்லாங்குழல் எடுத்து; ஊதின போது இசைத்தபொழுது; பறவையின் கணங்கள் பறவைக் கூட்டங்கள்; கூடு துறந்து தங்கள் கூடுகளைத் துறந்து விட்டு; வந்து கண்ணனிருக்கும் இடம் வந்து; சூழ்ந்து சூழ்ந்துகொண்டு; படுகாடு வெட்டி வீழ்ந்த காடு போல; கிடப்ப தம்மை மறந்து கிடப்ப; கறவையின் கணங்கள் பசு மாடுகளின் கூட்டங்கள்; கால் பரப்பிட்டு கால்களை பரப்பியபடி; கவிழ்ந்து இறங்கி தலையை கவிழ்த்தபடி; செவி காதுகளை; ஆட்டகில்லாவே ஆட்டாது கேட்டபடி நின்றன!
taṭavip parimāṟa Govindan plays the flute holding it; ciṟu viralkal̤ in His small fingers; cĕṅkaṇ koṭa with His beautiful eyes that slant; cĕyya vāy kŏppal̤ippa His red cheeks puff out; kūṭalippa with His curved; kuṟu vĕyarp puruvam eyebrows; kovintaṉ Kannan; kuḻal kŏṭu when He lifts; ūtiṉa potu and plays it; paṟavaiyiṉ kaṇaṅkal̤ flocks of birds; kūṭu tuṟantu leave their nests; vantu come to where He is; cūḻntu and surround Him; paṭukāṭu like uprooted forests; kaṟavaiyiṉ kaṇaṅkal̤ herds of cattle; kiṭappa leave the forest where they graze; kaviḻntu iṟaṅki come and lie down; kāl parappiṭṭu spreading their legs apart; āṭṭakillāve the stand there without moving; cĕvi their ears