செம் பெரும் தடம் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் நம் பரமன் இந்நாள் குழலூத கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர் அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீதம் வலையால் சுருக்குண்டு நம் பரமன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே -3-6-6 –
பதவுரை
செம்பெரு தடங் கண்ணன்–சிவந்து மிகவும் பெரிய திருக் கண்களை யுடையனாய் திரள் தோளன்–பருத்த தோள்களை