PAT 3.6.5

குழலோசை கேட்ட தும்புரு நாரதர் நிலை

279 முன்நரசிங்கமதாகி அவுணன்
முக்கியத்தைமுடிப்பான், மூவுலகில்
மன்னரஞ்ச * மதுசூதனன்வாயில்
குழலினோசை செவியைப்பற்றிவாங்க *
நன்னரம்புடையதும்புருவோடு
நாரதனும்தம்தம்வீணைமறந்து *
கின்னரமிதுனங்களும் தம்தம்
கின்னரம்தொடுகிலோமென்றனரே.
279 muṉ naraciṅkamatu āki * avuṇaṉ mukkiyattai muṭippāṉ * mūvulakil
maṉṉar añca * matucūtaṉaṉ vāyil kuzhaliṉ ocai * cĕviyaip paṟṟi vāṅka **
naṉ narampu uṭaiya tumpuruvoṭu * nārataṉum tam tam vīṇai maṟantu *
kiṉṉara mituṉaṅkal̤um tam tam * kiṉṉaram tŏṭukilom ĕṉṟaṉare (5)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

279. Once Madhusudhana, feared by the kings of the three worlds, took the form of Narasimhā( man-lion) and destroyed Hiranyan. When He plays the flute, Narada with his Tumburu veena, and players of the kinnaram, the midunam and other string instruments hear his music, forget their skills and say, “We won’t touch our musical instruments because we can’t compete with the lovely music of Madhusudanan. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் முன்பு ஒரு காலத்தில்; நரசிங்கம் அது ஆகி நரசிம்மமாகி; அவுணன் அசுரன் இரண்யனின்; முக்கியத்தை முடிப்பான் மேன்மையை முடித்தவனும்; மூவுலகில் மூன்று லோக; மன்னர் அஞ்சும் மன்னர்களும் பயப்படும்; மதுசூதனன் மது என்னும் அரக்கனை அழித்தவனும் ஆன; வாயில் குழலின் ஓசை உன் வாயிலிருந்து வரும் குழலோசை; செவியைப் பற்றி வாங்க காதுகளைப் பிடித்திழுக்க; நன் நரம்பு உடைய நல்ல நரம்புடைய வீணை ஏந்திய; தும்புருவோடு தும்புரு முனிவரும்; நாரதனும் நாரதரும்; தம் தம் வீணை மறந்து தங்களுடைய வீணையை மறந்தனர்; கின்னர மிதுனங்களும் கின்னரர் என்று பேர் பெற்றவர்களும்; தம் தம் கின்னரம் தங்களுடைய கின்னர வாத்தியங்களை; தொடுகிலோம் இனி வாசிக்க மாட்டோம்; என்றனரே என்றனர்
naraciṅkam atu āki He came as Narasimha; muṉ previously; mukkiyattai muṭippāṉ and destroyed; avuṇaṉ the asuran called hiranyan; matucūtaṉaṉ He also destroyed an arakkan called madhu; maṉṉar añcum who terrified the kings of; mūvulakil the three worlds; vāyil kuḻaliṉ ocai the flute music that comes from You; cĕviyaip paṟṟi vāṅka pulls the ears; nārataṉum narada with; tumpuruvoṭu his tambura veena; naṉ narampu uṭaiya that has nice strings; tam tam vīṇai maṟantu fogot his veena; kiṉṉara mituṉaṅkal̤um the so called kinnarars; ĕṉṟaṉare mentioned; tŏṭukilom that they will not play; tam tam kiṉṉaram their musical instrument called kinnara