PAT 3.6.10

குழலிசை கேட்ட மரங்களின் சேயல்

284 கருங்கண்தோகைமயிற்பீலியணிந்து
கட்டிநன்குடுத்தபீதகவாடை *
அருங்கலவுருவினாயர்பெருமான்
அவனொருவன்குழலூதினபோது *
மரங்கள்நின்றுமதுதாரைகள்பாயும்
மலர்கள்வீழும்வளர்கொம்புகள்தாழும் *
இரங்கும்கூம்பும்திருமால்நின்றநின்ற
பக்கம்நோக்கி அவைசெய்யும்குணமே.
284 karuṅkaṇ tokai mayil pīli aṇintu * kaṭṭi naṉku uṭutta pītaka āṭai *
aruṅkala uruviṉ āyar pĕrumāṉ * avaṉŏruvaṉ kuzhal ūtiṉa potu **
maraṅkal̤ niṉṟu matu tāraikal̤ pāyum * malarkal̤ vīzhum val̤ar kŏmpukal̤ tāzhum *
iraṅkum kūmpum tirumāl niṉṟa niṉṟa pakkam nokki * avai cĕyyum kuṇame (10)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

284. When the matchless one, the chief of the cowherds adorned with dark-eyed peacock feathers and a silk garment tied tightly and beautifully on his handsome body, plays the flute, the enthralled trees stand without moving; flowers pour down honey-like drops as if to bow and worship him and straight branches bend to hear the music. They all turn towards wherever the beautiful Thirumāl is because that is their nature.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கருங்கண் தோகை கருத்த கண்களோடு கூடிய; மயில் பீலி அணிந்து மயில் இறக்கையை அணிந்துகொண்டு; கட்டி நன்கு உடுத்த நன்றாக அழுத்தமாக சாத்திய; பீதக ஆடை பீதாம்பரத்தையும்; அருங்கல உருவின் அரிய ஆபரணங்கள் அணிந்த மேனியன்; ஆயர் பெருமான் ஆயர் பிரான்; அவன் ஒருவன் குழல் அவன் புல்லாங்குழல்; ஊதின போது வாசித்த போது; மரங்கள் நின்று மரங்கள் கூட மயங்கி நின்று; மது தாரைகள் பாயும் தேன் தாரைகளைப் பொழியும்; மலர்கள் வீழும் மலர்களைச் சொறியும்; வளர் மேல்நோக்கியுள்ள; கொம்புகள் தாழும் கொம்புகளும் தாழும்; இரங்கும் தாழ்ந்து; கூம்பும் கைகளைக் கூப்பி வணங்குவது போல்; திருமால் நின்ற நின்ற கண்ணன் எந்த பக்கம் திரும்பினாலும்; பக்கம் நோக்கி அந்த திசைகளில் திரும்பிக் கூப்பும்; அவை செய்யும் அந்த மரங்களின்; குணமே குணங்கள் தான் என்னே!
kaṭṭi naṉku uṭutta Kannan is well draped with; pītaka āṭai pithambaram (silk dress); mayil pīli aṇintu adorned with peacock feather that has; karuṅkaṇ tokai dark eyes; aruṅkala uruviṉ His body adorned with rare jewels; āyar pĕrumāṉ the Lord of cowherds; ūtiṉa potu when He plays; avaṉ ŏruvaṉ kuḻal His flute; maraṅkal̤ niṉṟu the trees stand still; matu tāraikal̤ pāyum and showering honey-laden nectar; malarkal̤ vīḻum flowers fall; kŏmpukal̤ tāḻum the branches; val̤ar that were reaching upwards; iraṅkum bow down; kūmpum as if folding their hands in worship; tirumāl niṉṟa niṉṟa wherever Krishna turned; pakkam nokki the trees seemed to turn and call outt; kuṇame such are the qualities; avai cĕyyum of those trees