PAT 3.5.9

முசுக்கணங்கள் குதி பயிற்றும் மலை

272 வன்பேய்முலையுண்டதோர்வாயுடையன்
வன்தூணெனநின்றதோர்வன்பரத்தை *
தன்பேரிட்டுக்கொண்டுதரணிதன்னில்
தாமோதரன்தாங்குதடவரைதான் *
முன்பேவழிகாட்டமுசுக்கணங்கள்
முதுகில்பெய்துதம்முடைக்குட்டன்களை *
கொம்பேற்றியிருந்துகுதிபயிற்றும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
272 vaṉ peymulai uṇṭatu or vāy uṭaiyaṉ * vaṉ tūṇ ĕṉa niṉṟatu or vaṉ parattai *
taṉ per iṭṭuk kŏṇṭu taraṇi taṉṉil * tāmotaraṉ tāṅku taṭavarai tāṉ **
muṉpe vazhi kāṭṭa mucuk kaṇaṅkal̤ * mutukil pĕytu tam uṭaik kuṭṭaṉkal̤ai *
kŏmpu eṟṟi iruntu kuti payiṟṟum * kovarttaṉam ĕṉṉum kŏṟṟak kuṭaiye (9)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

272. The One who drank milk from the breasts of the terrible Putanā and killed her, lifted the huge mountain that bears His name Govardhanā, like a pillar that bears a heavy weight. This victorious mountain that is home for the monkeys that climb on the branches of trees carrying their babies on their backs and teach them how to jump.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வன் பேய் பலசாலியான பேய் உருவில் வந்த பூதனையின்; முலை உண்டதோர் முலைப் பாலை உண்ட; வாய் உடையன் வாயையுடைய கண்ணன்; ஓர் வன் பரத்தை மிகுந்த பாரத்தைத் தாங்கிக் கொண்டு; வன் தூணென நின்றது ஒரு வலிய தூணைப்போல நின்று; தன் பேர் கோவர்த்தனன் என்ற தன் பெயரை; இட்டுக் கொண்டு வைத்துக் கொண்டு; தரணி தன்னில் இந்த உலகத்தில்; தாமோதரன் தாங்கு கண்ணபிரான் தாங்கிக் கொண்டு நின்ற; தடவரை தான் விசாலமான மலை தான்; முசு முசு என்ற குரங்குகளின்; கணங்கள் கூட்டம் தம் குட்டிகளுக்கு; முன்பே கிளைக்குக் கிளை; வழி காட்ட பாயும் வழியைக் காட்டிட; முதுகில் பெய்து முதுகிலே கட்டிக்கொண்டுபோய்; தம்முடைக் குட்டன்களை தம் குட்டிகளை; கொம்பு ஏற்றி இருந்து மரக்கொம்பிலே ஏற்றி வைத்து; குதி பயிற்றும் குதிக்கப் பயிற்றுவிக்கும் மலை; கோவர்த்தனம் என்னும் கோவர்த்தனம் என்னும்; கொற்றக் குடையே வெற்றிக் குடையே
vāy uṭaiyaṉ Kannan; mulai uṇṭator drank the milk from; vaṉ pey terrible Putanā; vaṉ tūṇĕṉa niṉṟatu like a pillar that; or vaṉ parattai that bears heavy weight; taraṇi taṉṉil in this world; iṭṭuk kŏṇṭu he lifts and holds; taṉ per the mountain that has His name; tāmotaraṉ tāṅku Lord Krishna; taṭavarai tāṉ in that expansive mountain; mucu monkeys; kaṇaṅkal̤ teach their younger ones; vaḻi kāṭṭa how to jump; muṉpe from one branch to another; mutukil pĕytu they carry on their back; tammuṭaik kuṭṭaṉkal̤ai their younger ones; kŏmpu eṟṟi iruntu to the top of the tree; kuti payiṟṟum and train them to jump; kovarttaṉam ĕṉṉum Govardhanam mountain; kŏṟṟak kuṭaiye is indeed a victorious umbrella