PAT 3.5.2

மதுசூதன் எடுத்த மலை

265 வழுவொன்றுமில்லாச்செய்கை வானவர்கோன்
வலிப்பட்டுமுனிந்துவிடுக்கப்பட்ட *
மழைவந்துஎழுநாள்பெய்துமாத்தடுப்ப
மதுசூதன்எடுத்துமறித்தமலை *
இழவுதரியாததோரீற்றுப்பிடி
இளஞ்சீயம்தொடர்ந்துமுடுகுதலும் *
குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
265 vazhu ŏṉṟum illāc cĕykai vāṉavarkoṉ * valippaṭṭu muṉintu viṭukkappaṭṭa *
mazhai vantu ĕzhu nāl̤ pĕytu māt taṭuppa * matucūtaṉ ĕṭuttu maṟitta malai **
izhavu tariyātatu or īṟṟup piṭi * il̤añ cīyam tŏṭarntu muṭukutalum *
kuzhavi iṭaik kāl iṭṭu ĕtirntu pŏrum * kovarttaṉam ĕṉṉum kŏṟṟak kuṭaiye (2)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

265. Govardhanā is the victorious umbrella-like mountain that Madhusudhanan carried to stop the rain and protect the cows when Indra, the king of gods commanded a heavy downpour. Govardhanā(Madhura) is a mountain where the female elephant bravely protects its young one under her legs, opposes lion and fights the lion that chases it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வழு ஒன்றும் இல்லா குறை ஒன்றுமில்லாத; செய்கை செய்கையையுடைய; வானவர்கோன் தேவேந்திரனால்; வலிப்பட்டு நிர்பந்திக்கப்பட்டு; முனிந்து கோபத்துடன்; விடுக்கப்பட்ட ஏவப்பட்ட; எழு நாள் ஏழு நாட்கள்; மழை வந்து பெய்து தொடர்ந்து மழை பெய்து; மாத் தடுப்ப பசுக்களைக் காக்க; மதுசூதன் எடுத்து கண்ணபிரான் எடுத்து; மறித்த மலை தலை கீழாக கவிழ்த்துப் பிடித்த மலை; இளஞ்சீயம் ஒரு சிங்கக்குட்டி; தொடர்ந்து முடுகுதலும் தொடர்ந்து வந்து துன்புறுத்த; இழவு தரியாதது தன் குட்டிக்கு வந்த துன்பதை பொறுக்கமாட்டாத; ஓர் ஈற்றுப் பிடி ஒரு பெண் யானை; குழவி தன் குட்டியை; இடைக் கால் நான்கு கால்களுக்கு நடுவில்; இட்டு இடுக்கிக்கொண்டு; எதிர்ந்து அந்த சிங்கக்குட்டியோடு; பொரும் போராடிய மலையானது; கோவர்த்தனம் என்னும் கோவர்த்தனம் என்னும்; கொற்றக் குடையே வெற்றிக் குடையே
vaḻu ŏṉṟum illā without any; cĕykai action; vāṉavarkoṉ Indran; valippaṭṭu who was compelled; muṉintu by anger; viṭukkappaṭṭa caused; ĕḻu nāl̤ seven days of; maḻai vantu pĕytu heavy downpour; māt taṭuppa to protect the cows; matucūtaṉ ĕṭuttu Kannan lifted; maṟitta malai and held the mountain upside down; il̤añcīyam when a lion cub; tŏṭarntu muṭukutalum continuously tries to harm; iḻavu tariyātatu a baby elephant; or īṟṟup piṭi just like how a female elephant; kuḻavi protect its child; iṭṭu by keeping it; iṭaik kāl between the legs; kovarttaṉam ĕṉṉum Govardhanam mountain; ĕtirntu which confronts; kŏṟṟak kuṭaiye is indeed a victorious umbrella; pŏrum and endure the dangers