PAT 3.5.1

கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகக்கொண்டு மழை தடுத்து ஆயர்களையும் ஆனிரைகளையும் காத்தல் கடல் வண்ணன் பொறுத்த மலை

264 அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும்
தயிர்வாவியும்நெய்யளறுமடங்கப்
பொட்டத்துற்றி மாரிப்பகைபுணர்த்த
பொருமாகடல்வண்ணன்பொறுத்தமலை *
வட்டத்தடங்கண்மடமான்கன்றினை
வலைவாய்ப்பற்றிக்கொண்டு * குறமகளிர்
கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. (2)
264 ## aṭṭuk kuvi coṟṟup paruppatamum * tayir- vāviyum nĕy- al̤aṟum aṭaṅkap
pŏṭṭat tuṟṟi * mārip pakai puṇartta * pŏru mā kaṭalvaṇṇaṉ pŏṟutta malai **
vaṭṭat taṭaṅkaṇ maṭa māṉ kaṉṟiṉai * valaivāyp paṟṟik kŏṇṭu * kuṟamakal̤ir
kŏṭṭait talaip pāl kŏṭuttu val̤arkkum * kovarttaṉam ĕṉṉum kŏṟṟak kuṭaiye (1)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

264. Lord Krishna ate the rice that was heaped like a mountain, curd running like a stream and ghee thick like mud in a single gulp and earned the wrath of Indra. Govardhanā is the mountain which He lifted, colored like the dark ocean lifted to protect

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அட்டுக்குவி சோற்று சமைத்துக் குவிக்கப்பட்ட சோறாகிற; பருப்பதமும் மலையும்; தயிர் வாவியும் தயிராகிற ஓடையும்; நெய் அளறும் அடங்க நெய்யாகிற சேறும் ஆகிய இவற்றை; பொட்டத் துற்றி சடக்கென ஒரே கவளமாக உண்டு; மாரிப் பகை மழை என்னும் பகையை; புணர்த்த உண்டாக்கினவனாய்; பொரு மா கடல் வண்ணன் கறுத்த கடல் நிறத்தன்; பொறுத்த கண்ணன் தூக்கித் தாங்கிய; மலை கோவர்த்தனமலை; வட்டத் தடங்கண் வட்டமான பெரிய கண்களையுடைய; மட மான் கன்றினை தாய்ப் பாசம் மிகுந்த மான் கன்றை; வலை வாய்ப் பற்றி வலையில் பிடித்து; கொண்டு அக்கன்றுகளுக்கு; குறமகளிர் குறப்பெண்கள்; கொட்டைத் தலை பஞ்சு நுனியில்; பால் கொடுத்து பாலூட்டி; வளர்க்கும் வளர்க்கும் மலை; கோவர்த்தனம் கோவர்த்தனம்; என்னும் என்னும் பெயருடைய; கொற்றக் குடையே வெற்றிக்குடையே
pŏṭṭat tuṟṟi Kannan, in a single gulp, ate; aṭṭukkuvi coṟṟu the rice that was heaped like a mountain; paruppatamum with lentils; tayir-vāviyum curd running like a stream and; nĕy-al̤aṟum aṭaṅka ghee thick like mud; puṇartta and earned; mārip pakai the wrath of the rain god; pŏṟutta Kannan who is; pŏru mā kaṭal vaṇṇaṉ colored like the dark ocean; malai lifted the Govardhana mountain; vaṭṭat taṭaṅkaṇ a young deer, with large round eyes; maṭa māṉ kaṉṟiṉai filled with maternal love; valai vāyp paṟṟi caught in a trap; kŏṇṭu for those deers; kuṟamakal̤ir the women; pāl kŏṭuttu fed deer with milk; kŏṭṭait talai from a cotton wick; val̤arkkum that nurturing; ĕṉṉum mountain is called; kovarttaṉam Govardhanam; kŏṟṟak kuṭaiye its indeed a victorious umbrella