PAT 3.4.10

பரமாண வைகுந்தம் நண்ணுவர்

263 விண்ணின்மீதுஅமரர்கள்விரும்பித்தொழ
மிறைத்துஆயர்பாடியில்வீதியூடே *
கண்ணன்காலிப்பின்னேஎழுந்தருளக்கண்டு
இளவாய்க்கன்னிமார்காமுற்ற
வண்ணம் * வண்டமர்பொழில்புதுவையர்கோன்
விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும் *
பண்ணின்பம்வரப்பாடும்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே. (2)
263 ## viṇṇiṉmītu amararkal̤ virumpit tŏzha * miṟaittu āyar pāṭiyil vītiyūṭe *
kaṇṇaṉ kālip piṉṉe ĕzhuntarul̤ak kaṇṭu * il̤aāyk kaṉṉimār kāmuṟṟa
vaṇṇam ** vaṇṭu amar pŏzhiṟ putuvaiyarkoṉ * viṭṭucittaṉ cŏṉṉa mālai pattum *
paṇ iṉpam varap pāṭum pattar ul̤l̤ār * paramāṉa vaikuntam naṇṇuvare (10)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

263. While the Gods in Heaven wish to celebrate Kannan, the God of Gods, he walks casually behind the cows along the streets of Gokulam, the cowherds' village, Seeing him, the young girls fall in love with him. Vishnuchithan, the chief of Puduvai surrounded with lovely groves where bees swarm, composed ten pāsurams about how the cowherd girls get charmed, when they see Kannan Those who sing these songs happily, will reach divine Vaikuntam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விண்ணின் மீது அமரர்கள் தேவலோகத்தில் தேவர்கள்; விரும்பித் தொழ தன்னை வணங்கித்தொழ விரும்பியும்; மிறைத்து அவர்களைப் பொருட்படுத்தாமல்; ஆயர் பாடியில் திருவாய்ப்பாடியில்; வீதியூடே கண்ணன் தெருவில் கண்ணன்; காலிப்பின்னே பசுக்களின் பின்னே; எழுந்தருள கண்டு வருவதைப் பார்த்து; இள ஆய்க் கன்னிமார் இளம் ஆயர் பெண்கள்; காமுற்ற வண்ணம் ஆசைப்பட்டதை; வண்டு அமர் வண்டுகள் நிறைந்த; பொழில் சோலைகளையுடைய; புதுவையர்கோன் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைவரான; விட்டுசித்தன் பெரியாழ்வார்; சொன்ன மாலை அருளிச்செய்த மாலையான; பத்தும் இப்பத்துப் பாசுரங்களையும்; பண் இன்பம் வர பண்ணுடன் இனிமையாக; பாடும் பத்தர் உள்ளார் பாடி அனுசந்திப்பவர்கள்; பரமான வைகுந்தம் பரமான வைகுந்தத்தை; நண்ணுவரே அடைவார்கள்
viṇṇiṉ mītu amararkal̤ while the gods in Heaven; virumpit tŏḻa wish to celebrate Kannan; miṟaittu ignoring them; vītiyūṭe kaṇṇaṉ Kannan is on the streets of; āyar pāṭiyil Aiyapadi; kālippiṉṉe coming behind the cattle; ĕḻuntarul̤a kaṇṭu seeing Him coming; il̤a āyk kaṉṉimār the young cowherd girls; kāmuṟṟa vaṇṇam fell in love; viṭṭucittaṉ Periazhwar; putuvaiyarkoṉ the chief of Srivilliputhur; pŏḻil which has lovely groves; vaṇṭu amar where bees swarm; cŏṉṉa mālai composed these; pattum ten pasurams; paṇ iṉpam vara those who recite them; pāṭum pattar ul̤l̤ār by happily singing; naṇṇuvare will reach; paramāṉa vaikuntam Vaikundam