PAT 3.1.4

ஆய்ச்சியரை மையல் செய்தவன்

226 மையார்கண்மடவாய்ச்சியர்மக்களை
மையன்மைசெய்துஅவர்பின்போய் *
கொய்யார்பூந்துகில்பற்றித்தனிநின்று
குற்றம்பலபலசெய்தாய் *
பொய்யா! உன்னைப்புறம்பலபேசுவ
புத்தகத்துக்குளகேட்டேன்! *
ஐயா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மம்தரவே.
226 maiār kaṇ maṭa āycciyar makkal̤ai * maiyaṉmai cĕytu avar piṉpoy *
kŏy ār pūntukil paṟṟit taṉi niṉṟu * kuṟṟam pala pala cĕytāy **
pŏyyā uṉṉaip puṟam pala pecuva * puttakattukku ul̤a keṭṭeṉ *
aiyā uṉṉai aṟintukŏṇṭeṉ * uṉakku añcuvaṉ ammam tarave (4)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

226. You fascinate the beautiful young cowherd girls whose dark eyes are decorated with kohl. You follow them holding onto their soft clothes and steal their clothes and stand away. You do many mischievous things. You tell lies and people gossip about you. I heard a lot about you near the pond. Dear child, I know who you are and I’m afraid to give you food.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மை ஆர் கண் மையிட்ட அழகான கண்களை உடைய; மட ஆய்ச்சியர் மடப்பம் உடைய ஆய்ச்சியர்; மக்களை பெண்களை; மையன்மை செய்து உன் பக்கம் வசீகரித்து; அவர் பின் போய் அவர்கள் பின்னாலேயே போய்; கொய் ஆர் பூந்துகில் அவர்களின் அழகிய புடவைகளை; பற்றி பிடித்துக்கொண்டு; தனி நின்று தனியனாகவே; குற்றம் பல பல பல விஷமங்களை; செய்தாய் செய்தாய்; பொய்யா! உன்னை பொய்யனே! உன்னைப்பற்றி; புறம் பல பேசுவ பிறர் பேசுகிற பழிச்சொற்கள்; புத்தகத்துக்கு உள ஒரு புத்தகம் எழுதுமளவுக்கு உள்ளது; கேட்டேன்! என் காதுபட கேட்டேன்; ஐயா! உன்னை பிரானே! உன்னை; அறிந்து கொண்டேன் யார் என்று அறிந்துகொண்டேன்; அஞ்சுவன் அச்சப்படுகிறேன்; அம்மம் தரவே பால் கொடுக்கவே பயப்படுகிறேன்
maiyaṉmai cĕytu You attract; maṭa āycciyar the cowherd; makkal̤ai women; mai ār kaṇ whose eyes were decorated with kohl; avar piṉ poy then went behind them; paṟṟi and took away; kŏy ār pūntukil their clothes; cĕytāy You do; kuṟṟam pala pala many mischevous things; taṉi niṉṟu all by Yourself; pŏyyā! uṉṉai You lie; puṟam pala pecuva people talk about You so much; puttakattukku ul̤a that one can write a book about; keṭṭeṉ! i hear them as they speak; aiyā! uṉṉai oh Lord!; aṟintu kŏṇṭeṉ I know who You are!; añcuvaṉ I am scared; ammam tarave can I give You milk?