PAT 3.1.11

இருடீகேசன் அடியாராவார்

233 காரார்மேனிநிறத்தெம்பிரானைக்
கடிகமழ்பூங்குழலாய்ச்சி *
ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான்
அம்மம்தாரேனென்றமாற்றம் *
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்
பட்டர்பிரான்சொன்னபாடல் *
ஏராரின்னிசை மாலைவல்லார்
இருடீகேசனடியாரே. (2)
233 ## kārār meṉi niṟattu ĕmpirāṉaik * kaṭikamazh pūṅkuzhal āycci *
ārā iṉṉamutu uṇṇat taruvaṉ nāṉ * ammam tāreṉ ĕṉṟa māṟṟam **
pārār tŏlpukazhāṉ putuvai maṉṉaṉ * paṭṭarpirāṉ cŏṉṉa pāṭal *
erār iṉṉicai mālaikal̤ vallār * iruṭikecaṉ aṭiyāre (11)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

233. Yashodā with fragrant flowers in her hair called the dark one colored like a cloud and told him that she will give him food sweet as nectar, Pattarpiran, the chief of Puduvai, praised by the whole earth, composed pāsurams with Yashodā’s words. Those who recite these pāsurams, will become the devotees of Rishikesā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காரார் மேனி கருத்த மேகம் போன்ற மேனி; நிறத்து நிறத்தையுடைய; எம்பிரானை என் பிரானை; கடிகமழ் நறுமணம் கமழ்; பூங்குழல் ஆய்ச்சி பூவைச் சூட்டிய யசோதை; ஆரா இன்னமுது தெவிட்டாத இனிய பாலை; உண்ண உண்ண; தருவன் நான் தந்து கொண்டிருந்த நான்; அம்மம் தாரேன் ‘அம்மம் தர அஞ்சுவன்’; என்ற மாற்றம் என்ற சொல்லியதை; பாரார் தொல் புகழான் உலகம் புகழும் கீர்த்தி பெற்ற; புதுவை மன்னன் ஸ்ரீவில்லிபுத்தூர் வாழும்; பட்டர் பிரான் பெரியாழ்வார்; சொன்ன பாடல் அருளிச்செய்த பாசுரங்களை; ஏரார் இயலழகாலே நிறைந்த; இன்னிசை இனியஇசையோடே கூடிய; சொல்மாலையை பாசுரங்களை; வல்லார் அனுசந்திப்பவர்கள்; இருடிகேசன் ரிஷிகேசனுக்கு; அடியாரே அடியவர் ஆவார்கள்
pūṅkuḻal āycci yashoda adorned with flowers; kaṭikamaḻ that were fragrant; ĕmpirāṉai to the Lord; niṟattu with the complexion; kārār meṉi of dark sky; taruvaṉ nāṉ when; uṇṇa feeding Him; ārā iṉṉamutu the sweet nectar; ĕṉṟa māṟṟam she felt that she; ammam tāreṉ was scared to give Him milk; paṭṭar pirāṉ Periazhwar; putuvai maṉṉaṉ who lives in SriVilliputhur; pārār tŏl pukaḻāṉ and praised by the whole earth; cŏṉṉa pāṭal has given these pasurams describing how Yashoda felt; vallār those who recite; cŏlmālaiyai these pasurams; iṉṉicai that is filled with music; erār and beauty; aṭiyāre will become devotees of; iruṭikecaṉ Rishikesā