PAT 2.8.7

ஒளியுடை வெள்ளறை நின்றவன்

198 கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்த *
பிள்ளையரசே! நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை *
உள்ளவாறுஒன்றும்அறியேன் ஒளியுடைவெள்ளறைநின்றாய்! *
பள்ளிகொள்போதுஇதுவாகும் பரமனே. காப்பிடவாராய்.
198 kal̤l̤ac cakaṭum marutum * kalakku azhiya utaicĕyta *
pil̤l̤aiyarace! * nī peyaip piṭittu mulai uṇṭa piṉṉai **
ul̤l̤avāṟu ŏṉṟum aṟiyeṉ * ŏl̤iyuṭai vĕl̤l̤aṟai niṉṟāy *
pal̤l̤ikŏl̤ potu itu ākum * paramaṉe kāppiṭa vārāy (7)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

198. You kicked and killed the evil Sakatāsuran who came disguised as a cart. You destroyed the two Asurans who came in the form of arjun (marudam) trees. You killed the devil Putanā, drinking milk from her breasts. I know that but I am unable to realize You. O beloved, my prince, You stay in flourishing Thiruvellarai. It is time for you to go to bed, O supreme lord, come and I will put kāppu on you to ward off evil eyes.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒளியுடை வெள்ளறை ஓளிமிக்க வெள்ளறையில்; நின்றாய்! நிற்பவனே!; கள்ளச் சகடும் வஞ்சனையுடன் வந்த சகடாசூரனையும்; மருதும் மருதமாக வந்த இரட்டைஅசுரர்களையும்; கலக்கு அழிய அடியோடு அழிந்து போக; உதைசெய்த காலால் உதைத்த; பிள்ளையரசே! பிள்ளைப் பிராய பிரானே!; நீ பேயைப் பிடித்து பூதனை எனும் பேயைப் பிடித்து; முலை உண்ட பின்னை பால் உணட பின்பு; உள்ளவாறு உன்னை நீ எப்படிபட்டவன் என்பதை; ஒன்றும் அறியேன் என்னால் அறிய முடியவில்லை; பள்ளிகொள் படுத்துறங்குகிற; போது இது ஆகும் வேளையாகிறது; பரமனே! காப்பிட வாராய் பரமனே! காப்பிட வாராய்
niṉṟāy! You reside in; ŏl̤iyuṭai vĕl̤l̤aṟai the luminous Thiruvellarai; utaicĕyta You kicked with Your legs; kalakku aḻiya and completely destroyed; marutum two asurans who came as marudam trees; kal̤l̤ac cakaṭum and also killed Sakatāsuran who came with evil intentions; pil̤l̤aiyarace! the little King!; nī peyaip piṭittu You killed Putana; mulai uṇṭa piṉṉai by drinking her milk from her breast; ŏṉṟum aṟiyeṉ I am unable to realize; ul̤l̤avāṟu who You really are; potu itu ākum its time to; pal̤l̤ikŏl̤ sleep; paramaṉe! kāppiṭa vārāy oh Lord! come to get a kappu