PAT 2.8.4

திருவெள்ளறையான் கண்ணன்

195 கண்ணில்மணல்கொடுதூவிக் காலினால்பாய்ந்தனையென்றென்று *
எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு இவரால்முறைப்படுகின்றார் *
கண்ணனே! வெள்ளறைநின்றாய்! கண்டாரோடேதீமைசெய்வாய்! *
வண்ணமேவேலையதொப்பாய்! வள்ளலே! காப்பிடவாராய்.
195 kaṇṇil maṇalkŏṭu tūvik * kāliṉāl pāyntaṉai ĕṉṟu ĕṉṟu *
ĕṇ arum pil̤l̤aikal̤ vantiṭṭu * ivar ār? muṟaippaṭukiṉṟār **
kaṇṇaṉe vĕl̤l̤aṟai niṉṟāy * kaṇṭārŏṭe tīmai cĕyvāy!
vaṇṇame velaiyatu ŏppāy * val̤l̤ale kāppiṭa vārāy (4)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

195. Countless children come again and again, complaining that you threw sand in their eyes and kicked them. O Kannan, you reside in Thiruvellarai. You bother everyone you see. Your complexion is the color of the ocean. You are the generous one, Come and I will put kāppu on you to save you from evil eyes.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ணனே! கண்ணனே!; வெள்ளறை நின்றாய்! வெள்ளறையில் நிற்பவனே!; கண்டாரோடே கண்டவர்கள் எல்லாரிடமும்; தீமை செய்வாய்! தீம்புகள் செய்கிறாய்!; வண்ணமே நிறத்தில்; வேலையது ஒப்பாய்! கடலுக்கு ஒப்பானவனே; வள்ளலே! உதார ஸ்வபாவனே!; கண்ணில் கண்ணில்; மணல் கொடுதூவி மணலை எடுத்துத் தூவி; காலினால் காலாலும்; பாய்ந்தனை என்று என்று உதைத்தாய் என்றும்; எண் அரும் கணக்கிடமுடியாத அளவு; பிள்ளைகள் வந்திட்டு பிள்ளைகள் வந்து; இவர் ஆல் இவர்கள் என்னிடம்; முறைப் படுகின்றார் முறையிடுகிறார்கள்!; காப்பிட வாராய் காப்பு இட வாராயே! என் கண்ணா!
kaṇṇaṉe! oh Kanna!; vĕl̤l̤aṟai niṉṟāy! You stand in Thiruvellarai!; tīmai cĕyvāy! You bother!; kaṇṭāroṭe whomever You see; velaiyatu ŏppāy! You have a deep ocean; vaṇṇame complexion; val̤l̤ale! generous by nature; maṇal kŏṭutūvi You through sand onto; kaṇṇil the eyes; pāyntaṉai ĕṉṟu ĕṉṟu and You kicked them; kāliṉāl with Your legs; pil̤l̤aikal̤ vantiṭṭu the children came; ivar āl to me; ĕṇ arum with countless; muṟaip paṭukiṉṟār complaints; kāppiṭa vārāy come and get a kappu