PAT 2.8.1

காப்பிடல் (திருஷ்டி தோஷம் வராதபடி திருவந்திக்காப்பிடக் கண்ணனை அழைத்தல்) திருவெள்ளறை அழகன்

192 இந்திரனோடுபிரமன் ஈசன்இமையவரெல்லாம் *
மந்திரமாமலர்கொண்டு மறைந்துவராய்வந்துநின்றார் *
சந்திரன்மாளிகைசேரும் சதுரர்கள்வெள்ளறைநின்றாய் *
அந்தியம்போதுஇதுவாகும் அழகனே! காப்பிடவாராய். (2)
192 ## intiraṉoṭu piramaṉ * īcaṉ imaiyavar ĕllām *
mantira mā malar kŏṇṭu * maṟaintu uvarāy vantu niṉṟār **
cantiraṉ māl̤ikai cerum * caturarkal̤ vĕl̤l̤aṟai niṉṟāy *
antiyam potu itu ākum * azhakaṉe kāppiṭa vārāy (1)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

192. Indra, Brahmā, Shivā and all other gods brought beautiful divine flowers, stood at a distance and looked at you happily. You abide in Vellarai where the moon shines above the palaces and the dancers sing your praise while they dance. Come, beautiful child, it is evening and I will put a kāppu on you to protect you from evil eyes.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இந்திரனோடு பிரமன் இந்திரன் பிரமன்; ஈசன் இமையவர் ருத்திரன் தேவர்; எல்லாம் அனைவரும்; மந்திர மந்திரங்களால்; மா மலர் புனிதமான மலர்களை; கொண்டு கையில் எடுத்துக் கொண்டு; மறைந்து உவராய் மறைவாய் அணுகி; வந்து நின்றார் வந்துநின்றார்கள்; சந்திரன் சந்திரன் ஒளிவீசும்; மாளிகை சேரும் மாடங்களில் வாழும்; சதுரர்கள் சதுரர்களின் ஊரான; வெள்ளறை வெள்ளறையில்; நின்றாய்! நின்று அருளியவனே!; அந்தியம் போது மாலை வேளையிலே; இது ஆகும் இது உற்றதாகும்; அழகனே! அழகனே; காப்பிட வாராய் உனக்குக் காப்பிடுகிறேன் நீ வாராய்
intiraṉoṭu piramaṉ Indira, Brahma; īcaṉ imaiyavar Rudra and other gods; ĕllām all; kŏṇṭu carried and brought; mantira prayer infused; mā malar divine flowers; vantu niṉṟār stood and looked at You; maṟaintu uvarāy from a distance; niṉṟāy! the One who resides and blesses in; vĕl̤l̤aṟai Vellarai; caturarkal̤ the town of Chaturars; māl̤ikai cerum who lived in palaces; cantiraṉ where the moon shines; antiyam potu it is evening; itu ākum and its appropriate; aḻakaṉe! oh beautiful child; kāppiṭa vārāy please come and I will put a kappu for protection