PAT 2.3.13

துவாதச நாமங்களின் பயன்

151 வார்காதுதாழப்பெருக்கியமைத்து
மகரக்குழையிடவேண்டி *
சீரால்அசோதைதிருமாலைச்சொன்னசொல்
சிந்தையுள்நின்றுதிகழ *
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்
பன்னிருநாமத்தாற்சொன்ன *
ஆராதஅந்தாதிபன்னிரண்டும்வல்லார்
அச்சுதனுக்குஅடியாரே (2)
151 ## vār kātu tāzhap pĕrukki amaittu * makarakkuzhai iṭa veṇṭi *
cīrāl acotai tirumālaic cŏṉṉa cŏl * cintaiyul̤ niṉṟu tikazha **
pār ār tŏl pukazhāṉ putuvai maṉṉaṉ * paṉṉiru nāmattāl cŏṉṉa *
ārāta antāti paṉṉiraṇṭum vallār * accutaṉukku aṭiyāre (13)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

Yashodā, wishing to adorn the big beautiful ears and make the lobes bigger, brought emerald earrings and called her child. The chief of Puduvai who is praised by the entire world, composed twelve hymns(pāsurams) with Yashodā's words about Thirumāl, in such a way that they stay in our thoughts. Those who recite these twelve pāsurams with Yashodā's words will be the devotees of Achuthan, the Lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வார் காது இயல்பாகவே நீளமாகவுள்ள காது; தாழப் பெருக்கி அமைத்து தாழ்ந்திடுமாறு செய்து; மகரக்குழை மகரவடிவு குண்டலங்களை; இடவேண்டி போட விரும்பி; சீரால் சிறப்பாக; அசோதை யசோதை; திருமாலை திருமாலைக் குறித்து; சொன்ன சொல் சொன்னவை; சிந்தையுள் நம் மனதில்; நின்று திகழ நிலையாக நின்றிருக்க; பாரார் தொல் வெகு காலமாக உலகத்தாரால்; புகழான் புகழுப்படும்; புதுவை வில்லிபுத்தூர்; மன்னன் மன்னன் பெரியாழ்வார்; பன்னிரு நாமத்தால் பன்னிரண்டு; சொன்ன திருநாமங்களால் சொன்ன; ஆராத ஆராத; அந்தாதி அந்தாதிப் பாடல்கள்; பன்னிரண்டும் பன்னிரண்டையும்; வல்லார் ஓத வல்லவர்கள்; அச்சுதனுக்கு எம்பெருமானுக்கு; அடியாரே அந்தரங்கமானவர்
acotai mother Yashoda; cīrāl specially; iṭaveṇṭi desired to insert; makarakkuḻai the emerald earrings; tāḻap pĕrukki amaittu to make earlobes of Kannan bigger; vār kātu which were already long; niṉṟu tikaḻa in order for this to stay for long; cintaiyul̤ in our mind; cŏṉṉa cŏl of what Yahsoda thought of; tirumālai Kannan; maṉṉaṉ Periazhwar, the king of; putuvai Villiputhur; pukaḻāṉ who was praised; cŏṉṉa composed; pārār tŏl by people for a long time; paṉṉiru nāmattāl tweleve; antāti poetic songs; ārāta in praise of Kannan; vallār those who recite; paṉṉiraṇṭum all the tweleve pasurams; aṭiyāre will remain close to; accutaṉukku Emperuman