PAT 2.10.9

வராகத்தின் உருவாகிய பெருமான்

221 வானத்தெழுந்த மழைமுகில்போல் * எங்கும்
கானத்துமேய்ந்து களித்துவிளையாடி *
ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை *
தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும்
தரணியிடந்தானால்இன்றுமுற்றும்.
221 vāṉattu ĕzhunta * mazhai mukil pol ĕṅkum *
kāṉattu meyntu * kal̤ittu vil̤aiyāṭi **
eṉattu uruvāy * iṭanta im maṇṇiṉai *
tāṉatte vaittāṉāl iṉṟu muṟṟum * taraṇi iṭantāṉāl iṉṟu muṟṟum (9)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

221. O Yashodā, your son, whose complexion is that of a cloud in the sky, loiters in the forest and plays happily. He took the form of a boar, went beneath and brought the earth back that was stolen by Hiranyakshan and put it back. Oh! Kannan did such great deeds. we fear that our connection with him is done.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானத்து எழுந்த ஆகாயத்தில் தோன்றிய; மழை மழைபொழியப்போகும்; முகில் போல் கருத்த மேகம்போல்; ஏனத்து உருவாய் வராஹ அவதாரம் எடுத்து; எங்கும் கானத்து காடுகளில் திரிந்து; களித்து கோரக்கிழங்குகளை புஜித்து; விளையாடி களித்து விளையாடி; இடந்த விடுவித்த; இம் மண்ணினை இந்த பூமியை; தானத்தே அதன் இடத்தில்; வைத்தானால் வைத்தவனான கண்ணபிரானால்; இன்று முற்றும் இன்று முடிந்தோம்; தரணி கடலிலிருந்து பூமியைப்; இடந்தானால் பெயர்த்தெடுத்துவந்த கண்ணபிரானால்; இன்று முற்றும் இன்று முடிந்தோம்
mukil pol He has the complexion of a dark clouds; vāṉattu ĕḻunta in the sky; maḻai that is ready to rain; eṉattu uruvāy by taking Varaha avatar; ĕṅkum kāṉattu he roamed in the forest; kal̤ittu ate the roots; vil̤aiyāṭi played; iṭanta and went beneath and brought; im maṇṇiṉai this earth back; vaittāṉāl and put it; tāṉatte in place; iṉṟu muṟṟum we are done; iṭantāṉāl because of Kannan who brought back; taraṇi the earth from waters; iṉṟu muṟṟum we are done