PAT 2.10.7

மாணுருவாய வாமனன்

219 மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்று *
மூவடிதாவென்று இரந்தஇம்மண்ணினை *
ஓரடியிட்டு இரண்டாமடிதன்னிலே *
தாவடியிட்டானால்இன்றுமுற்றும்
தரணியளந்தானால்இன்றுமுற்றும்.
219 māvali vel̤viyil * māṇ uruvāyc cĕṉṟu *
mūvaṭi tā ĕṉṟu * iranta im maṇṇiṉai **
ŏraṭi iṭṭu * iraṇṭām aṭitaṉṉile *
tāvaṭi iṭṭāṉāl iṉṟu muṟṟum * taraṇi al̤antāṉāl iṉṟu muṟṟum (7)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

219. O Yashodā, he went, as Vāmanā, to king Mahābali, who was performing a sacrifice. He asked for three feet of land, and measured this earth with one foot and the sky with the other foot. We think that was wonderful, but he stole our clothes, stays on the top of the tree and refuses to give them back. This isn’t fair.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாவலி மஹாபலியினுடைய; வேள்வியில் யாகபூமியிலே; மாண் பிரம்மசாரி; உருவாய்ச் சென்று வேடமிட்டு வந்து; மூவடி தா என்று மூன்றடி மண் தா என்று; இரந்த யாசித்துப் பெற்ற; இம் மண்ணினை இந்த பூமியை; ஓரடி இட்டு ஓரடியால் பூமி முழுவதும் அளந்து; இரண்டாம் அடி இரண்டாம் அடி; தன்னிலே அளக்கத்தொடங்கி; தாவடி மேலுலகம் அனைத்தையும்; இட்டானால் அளந்த கண்ணனால்; இன்று முற்றும் இன்று முடிந்தோம்; தரணி தன் பக்தனான வேந்திரனுக்காக; அளந்தானால் இப்படி இப்பூமியை அளந்த கண்ணனால்; இன்று முற்று ம் இன்று முடிந்தோம்
uruvāyc cĕṉṟu Vamana in disguise as; māṇ as bramachari; māvali went to Mahabali who was; vel̤viyil conducting a sacrifice; iranta and asked for; mūvaṭi tā ĕṉṟu three feet of land; oraṭi iṭṭu with His one step He measured; im maṇṇiṉai the earth; iraṇṭām aṭi with His second step; taṉṉile He measured; tāvaṭi the higher worlds; iṭṭāṉāl because of this Kannan; iṉṟu muṟṟum we are done; al̤antāṉāl beacause of this Kannan who measured; taraṇi the earth; iṉṟu muṟṟu m we are done