PAT 2.10.3

காளியன்மீது நடமாடியவன்

215 தடம்படுதாமரைப் பொய்கைகலக்கி *
விடம்படுநாகத்தை வால்பற்றிஈர்த்து *
படம்படுபைந்தலை மேலெழப்பாய்ந்திட்டு *
உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும்
உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும்.
215 taṭam paṭu tāmaraip * pŏykai kalakki *
viṭam paṭu nākattai * vāl paṟṟi īrttu **
paṭam paṭu paintalai * mel ĕzhap pāyntiṭṭu *
uṭampai acaittāṉāl iṉṟu muṟṟum * ucciyil niṉṟāṉāl iṉṟu muṟṟum (3)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

215. O Yashodā, your son stirred up the water in the pond where large lotuses bloom, grasped the tail of Kālingan the poisonous snake and climbed on its heads, dancing and shaking its whole body. We think that was good, but he stole our clothes, stays on the top of the tree and refuses to give them back. This isn’t fair.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தடம் படு விசாலமான; தாமரை பொய்கை தாமரைக் குளத்தை; கலக்கி கலக்கி; விடம்படு அதனால் விஷத்தைக்கக்கிக்கொண்டு; நாகத்தை மேலெழுந்த காளீயன் என்னும் நாகத்தை; வால் பற்றி வாலைப்பிடித்து; ஈர்த்து இழுத்துக் கொண்டு; படம் படு படமெடுக்கும்; பைந்தலை மேல் அதன் தலைமேல்; எழப் பாய்ந்திட்டு குதித்து பாய்ந்து கூத்தாடினான்; உடம்பை அது சரணமடையுமளவும்; அசைத்தானால் உடம்பை அசைத்தவனால்; இன்று முற்றும் இன்றோடு முடிந்தோம் என்று வருந்தினோம்; உச்சியில் நின்றானால் அதன் தலை மீது நின்று ஆடினான்; இன்று முற்றும் அதைப்பார்த்த நாங்களும் பயத்தால் நடுங்கினோம்
kalakki He stirred; tāmarai pŏykai the pond that had lotuses; taṭam paṭu that were big; viṭampaṭu as a result; nākattai Kālingan, the poisonous snake came to the surface; vāl paṟṟi he caught hold of it by its tail; īrttu and dragged; paṭam paṭu the hissing snake; ĕḻap pāyntiṭṭu He climbed and danced on; paintalai mel its head; acaittāṉāl he shook its entire body; uṭampai until it surrended to Him; iṉṟu muṟṟum we were sorry we were done; ucciyil niṉṟāṉāl he danced on its head; iṉṟu muṟṟum we were sorry we were done