PAT 1.4.9

வெண்ணெய் விழுங்கும் கண்ணன்

62 தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய *
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான் *
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண் *
வாழவுறுதியேல் மாமதீ! மகிழ்ந்தோடிவா.
62 tāzhiyil vĕṇṇĕy * taṭaṅkai āra vizhuṅkiya *
pezhai vayiṟṟu ĕmpirāṉ kaṇṭāy * uṉṉaik kūvukiṉṟāṉ **
āzhikŏṇṭu uṉṉai ĕṟiyum * aiyuṟavu illai kāṇ *
vāzha uṟutiyel * mā matī makizhntu oṭi vā (9)

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.4.9

Simple Translation

63. Scooping butter from the pots with His little hands, he swallowed as much as He could. His stomach is full and big like a pot. (pot body; butter soul) He calls you aloud and if you don't come, He will throw the discus at you, without any doubt. Oh lovely moon! if you want to survive quickly come with joy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா மதீ! பெருமையுடைய சந்திரனே!; தாழியில் வெண்ணெய் தாழியிலே உள்ளவெண்ணெயை; தடங்கை ஆர பெரிய கைநிறைய எடுத்து; விழுங்கிய அள்ளி அமுது செய்த; பேழைவயிற்று வயிறு பெருத்தவனான; எம்பிரான் கண்டாய் என் கண்ணபிரானைப் பார்; உன்னைக் கூவுகின்றான் உன்னை அழைக்கின்றான்; ஆழி கொண்டு நீ வாராதிருந்தால் சக்ராயுதத்தை; உன்னை எறியும் உன் மேல் எறிவான்; ஐயுறவு இல்லை காண் சந்தேகமே இல்லை காண்; மகிழ்ந்து ஓடிவா உவகையுடன் ஓடி வா
mā matī! o proud moon!; taṭaṅkai āra by hand, Kannan has taken large quantity; tāḻiyil vĕṇṇĕy of butter stored in pots; viḻuṅkiya and eaten; ĕmpirāṉ kaṇṭāy see my beloved Kannan; peḻaivayiṟṟu with big belly; uṉṉaik kūvuṉṟāṉ He is calling you; āḻi kŏṇṭu if you do not come He will hurl his divine discus; uṉṉai ĕṟiyum at you; aiyuṟavu illai kāṇ there is no doubt, see; makiḻntu oṭivā come running with joy