PAT 1.4.5

சிரீதரன் மழலைச் சொல்

58 அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா *
மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான் *
குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல் *
புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ!
58 azhakiya vāyil * amuta ūṟal tĕl̤ivuṟā *
mazhalai muṟṟāta * il̤añcŏllāl uṉṉaik kūvukiṉṟāṉ **
kuzhakaṉ cirītaraṉ * kūvak kūva nī potiyel *
puzhaiyila ākāte * niṉcĕvi pukar mā matī (5)

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.4.5

Simple Translation

58. From his beautiful mouth, with nectar dripping, he calls you aloud with his prattle. You keep moving when God Sridharan is calling you again and again. If you do not stop it means that your ears are shut and have no bore to listen. Tell me Oh! wonderful shining moon.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அழகிய வாயில் அழகிய திருப்பவளவாயில்; ஊறல் ஊறுகின்ற ஜலமாகிற; அமுத அம்ருதத்தோடு கூடிய; தெளிவுறா தெளிவற்ற; இளஞ்சொல்லால் மழலைப்பேச்சால்; உன்னைக் கூகின்றான் உன்னை அழைக்கின்றான்; குழகன் அழகன்; சிரீதரன் ஸ்ரீயை மார்பில் வைத்திருப்பவன்; கூவக் கூவ உன்னைப் பல முறை கூப்பிட்டும்; நீ போதியேல் நீ போகாமலிருந்தால்; நின் செவி உன் காதுகளில்; புழையில ஆகாதே துளை இல்லையோ என்றாகிவிடும்; புகர் மா மதீ! ஒளிமிக்க பெரிய சந்திரனே!
amuta with nectar; ūṟal dripping; aḻakiya vāyil from His divine mouth; il̤añcŏllāl by His tender speech; tĕl̤ivuṟā that is unclear; uṉṉaik kūkiṉṟāṉ Kannan calls for you; kuḻakaṉ the handsome One; cirītaraṉ One who has Lakshmi on His chest; kūvak kūva even though He calls you many times; nī potiyel if you do not go; puḻaiyila ākāte it seem there are no holes; niṉ cĕvi in your ears; pukar mā matī! o radiant, great moon!