PAT 1.4.3

வித்தகன் வேங்கடவாணன்

56 சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும் *
எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய் *
வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற *
கைத்தலம்நோவாமே அம்புலீ! கடிதோடிவா.
56 cuṟṟum ŏl̤ivaṭṭam * cūzhntu coti parantu ĕṅkum *
ĕttaṉai cĕyyilum * ĕṉmakaṉ mukam nerŏvvāy **
vittakaṉ veṅkaṭa vāṇaṉ * uṉṉai vil̤ikkiṉṟa *
kaittalam novāme * ampulī kaṭitu oṭi vā (3)

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.4.3

Divya Desam

Simple Translation

56. Oh moon, though you are surrounded by a shining wheel of light and you spread light everywhere, whatever you do, you cannot match the beauty of my son’s face. O lovely moon, come quickly. My clever son, the lord of the Venkatam hills is calling you. Don’t make him point at you for long and hurt his hands. O lovely moon, come running happily to play with him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சுற்றும் சூழ்ந்து நாற்புறமும் சூழ்ந்த; ஒளிவட்டம் ஒளிப்பொருந்திய மண்டலமானது; சோதி பரந்து எங்கும் எல்லா இடமும் ஒளி பரப்பினாலும்; எத்தனை செய்யிலும் எவ்வளவு முயற்சித்தாலும்; என் மகன் முகம் என் மகனின் திருமுக மண்டலத்துக்கு; நேரொவ்வாய் ஈடாக மாட்டாய்; வித்தகன் ஆச்சரியபடத்தக்கவன்; வேங்கடவாணன் திருவேங்கட எம்பிரான்!; உன்னை விளிக்கின்ற உன்னை அழைக்கின்றான்; கைத்தலம் நோவாமே அவன் திருக்கைகள் நோகாதபடி; அம்புலீ! கடிது ஓடிவா சந்திரனே! விரைவாக ஓடிவா!
ŏl̤ivaṭṭam the moon with shining wheel of light; cuṟṟum cūḻntu covering all directions; coti parantu ĕṅkum spreads light to all places; ĕttaṉai cĕyyilum no matter how much effort is made; nerŏvvāy it can never match; ĕṉ makaṉ mukam the radiance of my son’s divine face; vittakaṉ the wondrous one; veṅkaṭavāṇaṉ Lord Venkatesha!; uṉṉai vil̤ikkiṉṟa calls you; kaittalam novāme before His hand gets tired; ampulī! kaṭitu oṭivā o moon, hurry and come quickly!