(கிருஷி பண்ணி ஆள் பிடிக்கிறான் -யுகம் தோறும் -தேடிக் கொண்டே இருக்கிறான் இப்படி உனக்கே ஆள் பட்டு அடிமை செய்து கொண்டே இருக்க என்றுமே ஆகும்படி அருள வேணும் என்கிறார் இதில் )
அப்பிள்ளை உரை அவதாரிகை என்னுடைய மனஸ்ஸானது உன்னுடைய குணங்களிலே ஈடுபட்டது இனி இத்தைத் திரு உள்ளம் பற்றி பார்த்து அருள வேணும் என்கிறார் –
ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின் தாட் பார்த்து உழி