(அறிவற்ற விலங்குகளும் அறிவில் குறைந்த குறவர்களும் பகவத் பாகவதர்களுக்குப் பணி செய்யும் பெருமை பெற்ற திருமலையை நாடு எல்லாம் ஆஸ்ரயிக்க வேண்டாவோ என்கிறார் -)
அப்பிள்ளை உரை அவதாரிகை திர்யக்குகளும் கிட்டி அடிமை செய்ய ஆசைப்படும் திருமலையை நாட்டார் ப்ரதக்ஷிணம் முதலானவைகளைப் பண்ணி (ப்ரதக்ஷிணம் ஸ்ரவணம் நமஸ்காரம் திரு நாம சங்கீர்த்தனம் போன்ற )- அனுகூல வ்ருத்திகளைப் பண்ணி ஆஸ்ரயிப்பார்கள்