NMT 20

தேவதேவனே எல்லாமாக இருப்பவன்

2401 நீயேயுலகெல்லாம் நின்னருளேநிற்பனவும் *
நீயே தவத்தேவதேவனும் * - நீயே
எரிசுடரும்மால்வரையும் எண்திசையும் * அண்டத்
திருசுடருமாயவிவை.
2401 nīye ulaku ĕllām * niṉ arul̤e niṟpaṉavum *
nīye tavat teva tevaṉum ** - nīye
ĕri cuṭarum māl varaiyum * ĕṇ ticaiyum * aṇṭattu
iru cuṭarum āya ivai -20

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2401. You are the world. and everything in the world abides through your grace. You are the god of gods that one achieves by tapas, the sacrificial fire, tall mountains, the eight directions, the bright sun and the moon.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகு எல்லாம் உலகங்களுக்கெல்லாம்; நீயே தலைவன் நீயே; நிற்பனவும் அவ்வஸ்த்துக்கள் இருப்பதுவும்; நின் அருளே உன் அருளாலே; தவ தபஸ்விகளான பிரமன் முதலிய; தேவ தேவர்களுக்கும்; தேவனும் நீயே தலைவன் நீயே; எரி சுடரும் ஒளி வீசும் அக்னிக்கும்; மால் வரையும் பெரிய மலைகளுக்கும்; எண் திசையும் எட்டு திசைகளுக்கும்; அண்டத்து அண்டத்திலிருக்கும்; இரு சுடரும் ஆய ஸூரிய சந்திரர்களுக்கும்; இவை நீயே தலைவன் நீயே
ulagu ellām nīyĕ you are the controller of all the worlds; niṛpanavum the stable, purushārtham (end benefit) of mŏksham (liberation / ṣrīvaikuṇtam); nin arul̤ĕ due to your mercy alone; thavam dhĕvar dhĕvanum nīyĕ you are the head of celestial entities such as brahmā et al who became celestial entities after carrying out penance.; eri sudarum the splendorous agni (fire); māl varaiyum the huge mountains which sustain earth; eṇ dhisaiyum all the entities present in the eight directions; aṇdaththu present in the universe; iru sudarum chandhra sūrya (moon and sun); āya ivai all these; nīyĕ are only you