NMT 16

கண்ணனையே யான் எண்ணுவேன்

2397 நிலைமன்னுமென்னெஞ்சம் அந்நான்று * தேவர்
தலைமன்னர்தாமே மாற்றாக * - பலமன்னர்
போர்மாள வெங்கதிரோன்மாயப், பொழில்மறைய *
தேராழியால்மறைத்தாரால்.
2397 nilaimaṉṉum ĕṉ nĕñcam * annāṉṟu * tevar
talai maṉṉar * tāme māṟṟāka ** - pala maṉṉar
por māl̤a * vĕm katiroṉmāyap pŏzhil maṟaiya *
ter āzhiyāl maṟaittārāl-16

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2397. My heart always worships the god of the gods who hid the bright hot sun with his discus in the Bhārathā war and destroyed the many enemies of the Pāndavās.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அந்நான்று பாரதயுத்தம் நடந்த அன்று; தேவர் தலை மன்னர் தாமே எம்பெருமான் தானே; மாற்றாக எதிரியாயிருந்து; பல மன்னர் பல மன்னர்கள்; போர் போரில்; மாள மாண்டுபோகச் செய்தான்; தேர் தேர்ச்சி பெற்ற; ஆழியால் சக்கராயுதத்தினால்; வெம் கதிரோன் சுடும் சூரியனை; மாய அஸ்தமிக்கும்படியாகவும்; பொழில் பூமி முழுதும்; மறைய இருள் மூடும்படியாகவும்; மறைத்தாரால் மறைத்த பெருமானின் அடியார்களிடம் காட்டிய கருணை; என் நெஞ்சம் என் மனதை கவலையில்லாமல்; நிலைமன்னும் இருக்கச்செய்துவிட்டது
annānṛu during the period when the mahābhāratha war was being fought; dhĕvar thalaimannar thāmĕ (emperumān) himself, who is the head of all celestial entities; māṝu āga positioning as an enemy; pala mannar many kings; pŏr in the battlefield; māl̤a to be killed; vem kadhirŏn sūriya (sun); māya to get set (at an unnatural time); pozhil maṛaiya the entire earth to be engulfed in darkness; thĕr āzhiyāl with the divine disc; maṛaiththārāl by emperumān who hid (sūrya); en nenjam my mind (which is fickle); nilai mannum will hold on in a steadfast manner