Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Divya Prabandam
»
Nāchiyār Thirumozhi
»
தனியன் / Taniyan
நாச்சியார் திருமொழி தனியன்கள் / Nāchiyār Thirumozhi taṉiyaṉkal̤
கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் * தென் திருமல்லி நாடி * செழுங்குழல் மேல்
மாலத்தொடை தென்னரங்கருக்கீயும் மதிப்புடைய
சோலைக்கிளி * அவள் தூய நற்பாதம் துணை நமக்கே
kolac curi caṅkai māyaṉ cĕvvāyiṉ kuṇam viṉavum
cīlattaṉal̤ * tĕṉ tirumalli nāṭi * cĕḻuṅkuḻal mel
mālattŏṭai tĕṉṉaraṅkarukkīyum matippuṭaiya
colaikkil̤i * aval̤ tūya naṟpātam tuṇai namakke
திருக்கண்ண மங்கை ஆண்டான் / tirukkaṇṇa maṅkai āṇṭāṉ
NAT.1.0.2.1
Your browser does not support the
audio
element.
NAT.1.0.2.2
Your browser does not support the
audio
element.
NAT.1.0.2.3
Your browser does not support the
audio
element.
Word by word meaning
சீலத்தனள்
— விருப்பம் உடையவளும்;
தென் திருமல்லி நாடி
— தென் திருமல்லி நாட்டுத் தலைவியும்;
செழுங்குழல்
— செழுமை மிக்க தன் கூந்தலில்;
மேல்
— பூச்சூட்டி இருப்பவளும்;
தென்னரங்கருக்கு
— கண்ணனுக்கு;
மாலத் தொடை
— மாலையை;
ஈயும்
— ஸமர்ப்பிக்க வேண்டும் என்ற;
மதிப்புடைய
— மதிப்பையும் மேன்மையையும் உடைய;
சோலைக் கிளி
— சோலைக் கிளி போன்ற;
அவள் தூய
— தூய இனிய பேச்சை உடையவளுமான;
நல் பாதம்
— ஆண்டாளின் புனிதமான திருவடிகளே;
துணை நமக்கே
— நமக்கு புகலிடம்;
கோலச்சுரி
— அழகிய வரிகளையுடைய;
சங்கை
— பாஞ்சஜன்ய சங்கை நோக்கி;
மாயன்
— அதனிடத்திலிருந்து மாயக்கண்ணனின்;
செவ்வாயின்
— சிவந்த அதரத்தின்;
குணம் வினவும்
— குணவிசேஷங்களைக் அறியும்
நாச்சியார் திருமொழி தனியன்கள் / Nāchiyār Thirumozhi taṉiyaṉkal̤